அன்னலக்ஷ்மியின் அருமையான குருமா
உணவு சமைப்பதில் கைபக்குவம் என்பதுதான் ஒவ்வொருவருக்கும் இன்னொருவருக்குமான வித்தியாசத்தை வெளிப்படுத்தும் அம்சமாகும். மாம்பலம் அன்னலக்ஷ்மி என்ற உணவகம் மேற்கு மாம்பலம் ரயில்வே ரோட்டை ஒட்டி குப்பையா தெருவில் முதன் முதலில் திறக்கப்பட்டது.
விளம்பரம் போன்ற ஆடம்பரங்கள் இல்லாமல், தனிச்சுவையின் மூலம் பல வாடிக்கையாளர்களால் உணவகம் ஈர்க்கப்பட்டது. பின்னர் தி.நகரில் விஜயராகவா சாலையில் ஒரு உணவகம் திறக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக மேற்குமாம்பலத்தில் உள்ள கிளை மூடப்பட்டு, இப்போது தி.நகரில் உள்ளஅன்னலக்ஷ்மி உணவகம் மட்டும் செயல்படுகிறது.
இங்கு அடிக்கடி நான் சாப்பிடப்போவதுண்டு. உடலுக்கு தீங்கு செய்யாத ஆரோக்கியமான உணவுகளை ருசியாக வழங்குவதான் இந்த உணவகத்தின் குறிக்கோள்.
இந்த உணவகத்தில் சப்பாத்தியும், குருமாவும் எனக்குப் பிடித்தமான உணவு. சப்பாத்தி மிகவும் மென்மையாக இருக்கும். அதற்கு சைட் டிஷ் ஆக தரப்படும் குருமா அதைவிட இன்னும் சுவையாக இருக்கும். குருமாவில் கேரட் உள்ளிட்ட காய்கறி கலவை இருக்கும்.
மசாலாப்பொருட்கள், காரம் என்று எல்லாம அளவோடு போடப்பட்டு, அருமையான சுவையோடு குருமா இருக்கும். சாப்பிடுவதற்கு இன்னொரு ஒரு கப் வாங்கிக்கொள்ளலாம் என்பது போல அதன் தனிச்சுவை திகழும். சென்னையில் பல ஹோட்டல்களில் சப்பாத்தி சாப்பிட்டிருந்தாலும், இந்த அன்னலக்ஷ்மி உணவகத்தின் சப்பாத்தி அதற்கு தரும் சைட் டிஷ் என்பது தனிச்சுவை. இரண்டு சப்பாத்தி சைட்டிஷ் குருமா 50 ரூபாய்தான். ஆனால், அந்த சுவைக்கு இதை விட கூடுதலாகவே கொடுக்கலாம் அந்த அளவுக்கு சுவை அள்ளுகிறது.
-அறுசுவை ரசிகன்
Comments