திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியின் வெற்றிக்கதை


திண்டுக்கல் நகரம் பூட்டு தயாரிப்புக்கு மட்டுமின்றி, தலப்பாகட்டி பிரியாணிக்கும் புகழ் பெற்றது. திண்டுக்கல் ஆர்.எஸ்.சாலையில் 1957-ம் ஆண்டு நாகசாமி நாயுடு என்பவரால் ஆனந்த விலாஸ் பிரியாணி என்ற பெயரில் கடை ஆரம்பித்தார்.

நாகசாமி நாயுடு தமது தலையில் தலப்பா கட்டி இருப்பார். அதனால், இவரது கடையை தலப்பாகட்டி பிரியாணி கடை என்று திண்டுக்கல் மக்கள் செல்லமாக கூப்பிட ஆரம்பித்தனர்.  இந்தப் பெயரே நிலைத்து நின்று தலப்பாகட்டி பிரியாணி என்ற என்ற அடையாளம்தான் இப்போது அந்த கடையின் உலகாளவிய வணிக முத்திரையாக மாறிப்போனது.

தலப்பாட்டி கட்டி பிரியாணிக்கு என்ற ஒரு தனி சுவை என்றுமே நிலைத்து நிற்கிறது. அதற்கு காரணம் மற்றவர்கள் எல்லாம் பிரியாணி அரிசி என்று அழைக்கப்படும் பாசுமதி அரிசியில் பிரியாணி செய்வார்கள். ஆனால், இவர்கள் மட்டும் வித்தியாசமாக சீரக சம்மா அரிசியில் பிரியாணி செய்தனர். தவிர தரம் வாய்ந்த மசாலாப் பொருட்களை வாங்கி அரைத்து அந்த மசாலாக்களை மட்டுமே இவர்கள் உபயோகிக்கின்றனர். கன்னிவாடி, பரமத்தி போன்ற சந்தைகளில் வாங்கப்படும்  கோழி, ஆடு, மாடு ஆகியவற்றின் தரமான இறைச்சி வகைகளை மட்டுமே இவர்கள் கடைகளில் இன்றளவும் பயன்படுத்துகின்றனர். இதுதான் அவர்களின் தனித்தன்மையை, சுவையையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலை நிறுத்தி இருக்கிறது.

தலப்பாகட்டி பிரியாணி கடையின் உரிமையாளர் நாகசாமி நாயுடு கடந்த 1978ம் ஆண்டு இறந்து விட்டார். அதன் பின்னர் ஆனந்தவிலாஸ் பிரியாணி கடை என்பது தலப்பாக்கட்டி ஆனந்த விலாஸ் பிரியாணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவரது வாரிசுகள் இப்போது கடையை நடத்தி வருகின்றனர்.

முதலில் திண்டுக்கல்லில் மட்டுமே இந்த கடை புகழ் பெற்று விளங்கியது. திண்டுக்கல் வரும் சினிமா பிரபலங்கள் தலப்பாட்டிகட்டி பிரியாணிக்கு ரசிகர்கள் ஆனார்கள். பின்னர் திண்டுக்கல் வழியாக பிரபலங்கள் செல்லும்போது தலப்பாகட்டி பிரியாணி கடைக்கும் வந்து செல்வது வாடிக்கையானது. குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலப்பாக்கட்டி பிரியாணி கடைக்கு தொடர் ரசிகராக இருந்து வந்தார். நாளுக்கு நாள் தலப்பாக்கட்டியின் செல்வாக்கு அதிகரித்தது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு திண்டுக்கல்லுக்கு வெளியேவும் கடைகள் திறக்க ஆரம்பித்தனர்.

தமிழகம் முழுவதும் அதன் கிளைகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. இப்போது வரை 64 இடங்களில் தலப்பாக்கட்டி பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இப்போது ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, இலங்கை, அமெரிக்கா நாடுகளிலும் தலப்பா கட்டி உணவங்கள் திறக்கப்பட்டு சர்வதேச அளவில் சுவையின் ஆதிக்கத்தை பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள தலப்பாக்கட்டி உணவகங்கள் மூலம் தினசரி 4000 கிலோவுக்கும் அதிகமாக பிரியாணி தயாரிக்கப்படுகின்றது.  


Comments


View More

Leave a Comments