நலம் பரிமாறும் மூலிகைப் பந்தல்...


மோர்ப் பந்தல் நீர்ப் பந்தல் போல, மூலிகைப் பந்தல்... திருப்பத்தூர் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் பாரம்பரிய மூலிகைப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது... சீரக குடிநீர்... கிராம்பு நீர்... ஆடாதொடை குடிநீர்... அதிமதுர குடிநீர்... கற்பூரவள்ளி சுரசம்... தூதுவளை ரசம் இன்னும் மேலும் பல மூலிகை பானங்கள் மூலிகைப் பந்தலுக்குள் இடம் பிடிக்கும்.

தேவைப்படின் குறிகுணங்களுக்கு ஏற்ப நாட்டுக் கோழி ரசத்திற்கும் இடமுண்டு... மூலிகைப் பந்தலின் மேல் வெட்டிவேர் பரப்பி, அதில் தினமும் நீர்த் தெளிக்க தெளிக்க நறுமணம், சித்த மருத்துவ மையம் முழுவதும் பரவுவது மனதிற்கு இதமளிக்கும்... பாரம்பரிய மருந்தகத்தில் தயாரிக்கப்படும் மூலிகை பானங்கள் சுட சுட மூலிகைப் பந்தலில்…

தென்னை ஓலைகள் சவுக்குக் கொப்புகளின் மேல் ஓய்வெடுக்க... வெட்டிவேரோ தென்னை ஓலைகள் மீது தடம்பதிக்க மூலிகைப் பந்தலோ சித்த மருத்துவத்தின் பெருமையை வாசனையாய் பரப்ப தயாராகிவிட்டது...

மரு.வி.விக்ரம் குமார்


#HealthyHerbal #HealthyHerbalPandal


Comments


View More

Leave a Comments