சளியை துரத்தும் தூதுவேளை(தூதுவளை)!


வைத்தியம் சொல்லி ரொம்ப நாளாச்சி. இன்னைக்கி தூதுவேளை பத்தி சொல்றேன். தூதுவேளையை தூதுவளைன்னும் சொல்வாங்க. பொதுவா தூதுவேளை பத்தி எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீங்க. உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை நரம்பு மண்டலத்தோட செயல்பாட்டை பகிர்ந்துகொடுக்குறது மட்டுமில்லாம அது எல்லாத்தையும் உணவாவும், மருந்தாவும் பிரிச்சி கொடுத்து தூது போறதால இதுக்கு தூதுவேளைனு பெயர் வந்திச்சி. தூதுவேளையில முள் அதிகமாக இருக்கும். இதனாலயே நிறையபேருக்கு இதை பிடிக்காது. ஆனா அந்த முள் நிறைஞ்ச தூதுவேளையில நிறைய விஷயம் இருக்கு. சின்னக்குழந்தைகளுக்கு சளி பிடிச்சா அஞ்சாறு தூதுவேளை இலையை எடுத்து கசக்கி சாறு பிழியணும். கூடவே ஒரு சின்ன வெங்காயம், கொஞ்சம் கல் உப்பு சேர்த்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தா வாந்தி எடுக்கும், இல்லைனா மலத்தோட சேர்த்து சளி வெளியாயிரும். சின்னக்குழந்தைங்களுக்கு மட்டுமில்ல பெரியவங்களுக்கு சளி பிடிச்சாக்கூட தூதுவேளையை துவையல் செஞ்சோ, சட்னியாக்கியோ சாப்பிடலாம். கொஞ்சம் கசப்பா இருக்கும். கசப்புதான் நல்ல மருந்துங்கறது நிறைய பேருக்கு தெரியல. வாய்க்கு ருசியா சாப்பிட்டு சாப்பிட்டு ஒட்டுமொத்த நோய்க்கும் அடிமைப்பட்டு கிடக்கிறோம். இனிமேலாவது கண்ணை முழிச்சி பார்த்து உடம்பை பேணுவோமா?

சரி விஷயத்துக்கு வாரேன்.

தூதுவேளை பூவை பாலில் வேக வச்சி சர்க்கரை சேர்த்து ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டு வந்தா இளமையா இருக்கலாம். சும்மா வெறுமனே தினமும் ரெண்டு பூவை எடுத்து வாயில போட்டா உடம்பு பளபளனு இருக்கும். தூதுவேளையில இலை மட்டுமில்லாம வேர், பூ, பழம்னு எல்லாத்துக்கும் ஒரு ஒரு மருத்துவக்குணம் இருக்கு.

தூதுவேளை எங்க கிடைக்கும்னு கேக்காதீங்க. ஒரு குச்சியை எடுத்து நட்டு வச்சா அது தானா வளரப்போவுது. இல்லைனா ரோட்டோரமா கீரை வித்துட்டு இருக்குற பாட்டிமார்கிட்ட சொல்லி வச்சா போதும். எங்கயாவது பறிச்சிட்டு வந்து தருவாங்க.

நன்றி; திரு.Maria Bellsin 


Comments


View More

Leave a Comments