உடல், மனதை காக்கும் இயற்கை மருத்துவம் படிக்க வேண்டுமா?


கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் இயற்கை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இயற்கை உணவுப் பொருட்கள் மீதும் பலர் விருப்பம் கொண்டு வருகின்றனர். இயற்கை மருத்துவம் மற்றும் யோக கலை படிப்புகளும் தமிழகத்தில் உள்ளன.

சென்னை, தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பத்து இடங்களில் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் பட்டப்படிப்பு கற்றுத் தரப்படுகிறது. இந்த படிப்பு மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் கொண்டதாகும்.

இந்த பட்டப்படிப்பு தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டப்படிப்பில் சேருவதற்கு 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

படிப்பு முடித்த உடன், இயற்கை மருத்துவமனை தொடங்கி சேவை செய்யலாம். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணிவாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இணையதளத்த இணைப்பை அணுகவும்; http://www.gynmc.com/ 


Comments


View More

Leave a Comments