அரசு அனுமதித்தும் ஹோட்டல்களில் பார்சல் மட்டும் கொடுக்கின்றனர் என் தெரியுமா?


கொரோனாவை தடுக்கும் நோக்கத்துடன் தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து பொது ஊரடங்குடன் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி உணவகங்களில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாபிபட அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் இன்னும் பார்சல் மட்டும்தான் கொடுக்கின்றனர். அதற்கு காரணம் என்ன என்று சில உணவு விடுதிகளில் நாம் விசாரித்தோம்.

சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் உள்ள ஒரு உணவகம் எப்போதுமே வாடிக்கயாளர்களால் நிரம்பிக் காணப்படும். அந்த உணவு விடுதியில் இப்போதும் பார்சல் மட்டும்தான் கொடுக்கின்றனர். அந்த உணவு விடுதியில் வேலை பார்த்தபலர் இன்னும் ஊர்களில் இருந்து திரும்பி வரவில்லை. பொது போக்குவரத்து தொடங்காத தால், ஊழியர்கள் திரும்பி வருவதில் சிக்கல் உள்ளது. எனவே இருக்கும்குறைந்த ஊழியர்களைக் கொண்டு பார்சல் சேவை மட்டும் வழங்குவதாக கூறுகின்றனர். இதுதான் பெரும்பாலான உணவு விடுதிகளின் நிலை. தமிழகத்தில் பெரும்பாலான ஓட்டல்களில் பாத்திரம் கழுவது முதல் பரிமாறுவது வரை புலம் பெயர் தொழிலாளர்கள்தான் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் எல்லோரும் சொந்த ஊருக்குச் சென்று விட்டதால், ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சரவணபவன், சங்கீதா போன்ற உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கின்றனர். இந்த உணவகங்களில் உள்ளூர் ஆட்களும், மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட ஆட்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

 


Comments


View More

Leave a Comments