
எப்படி சாப்பிடுவது என்று தெரியுமா?
உணவு என்பது நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. மனம் சிந்திப்பதற்கான ஆற்றலையும் உணவு தருகிறது. எனவே உணவு என்பது இன்றியமையாத ஒன்று. அந்த உணவை ஆரோக்கியமானதாக உண்ண வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆரோக்கியமான உணவை நேரத்துக்கு சாப்பிட்டால், உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
அதே போல சாப்பிடும் முறையிலும் உரிய முறையைப் பின்பற்ற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பலர் சாப்பிடவே நேரமில்லை என்று சொல்வதையே ஃபேஷன் ஆக்கி விட்டனர். அவ்வளவு வேலை பிசியாக இருக்கின்றேன் என்று காட்டிக்கொள்கின்றார்களாம்.
சிலர் நின்றபடி வாயில் அள்ளிப்போட்டு விட்டு கிளம்பி விடுவார்கள். சில ஹோட்டல்களில் நின்று கொண்டே சாப்பிடும் முறைதான் உள்ளது.
நின்று கொண்டே சாப்பிடுவது, அவசர, அவசரமாக எதையாவது வாயுக்குள் அள்ளிப்போட்டுகொண்டு செல்வது எல்லாம் சரியான முறை அல்ல. டைனிங் டேபிளிலும் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது என்று சொல்கின்றனர்.
காலை தொங்கப்போட்டு உட்கார்ந்து சாப்பிடுவதால், கால்பகுதிக்கு மட்டும்தான் அதிக ரத்த ஓட்டம் இருக்கும். உட்கார்ந்து சாப்பிடுவதால், காலை மடக்குவதன் மூலம் இடுப்புக்கும் மேற்பகுதியிலும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உணவு செரிமானம் ஆவதும் எளிது. சாப்பிட வேண்டும் என்றால், தரையில் ஏதேனும் விரிப்பை விரித்து அதில் சம்மணம்போட்டு அமர்ந்து நமக்கு முன்பு இலையில் அல்லது தட்டில் உணவு போட்டு சாப்பிட வேண்டும். சாப்பிடும் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். உமிழ் சுரப்பதுடன் சேர்த்து உணவு சாப்பிட வேண்டும். உமிழ் நீரில் என்சைம்கள் அதிகம் இருப்பதால், உணவின் நச்சுத்தன்மையை போக்கும்.
சாப்பிடும்போது தொலைகாட்சி பார்ப்பதோ அல்லது புத்தகம் படிப்பதோ கூடாது. பிடித்தமான உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். பிடிக்காத உணவுகளை கட்டாயப்படுத்தி சாப்பிடக் கூடாது.
Comments