ஐடி பணியில் இருந்து விலகினார். உணவு தொழிலில் சாதிக்கிறார்


கிரிபா தர்மராஜ் கடந்த ஏழு ஆண்டுகளாக தமது உணவுத்தொழிலை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு அவரது கணவர் மயில்வாகணனும் உதவுகின்றார்.

எப்போதுமே சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே இருப்பவர் கிரிபா. இவரது கணவர் ஒரு பாரம்பர்ய தொழில் நிறுவனத்தைச் சேர்ந்தவர். இதனால், இவருக்கும் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

தமது மகன் மகி பிறந்த பின்னர்தான் இவருக்கு ஒரு யோசனை உதித்திருக்கிறது. குழந்தை பிறந்த உடன், குழந்தையும், தாயும் சத்து மிகுந்த உணவுகள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அப்போதுதான் இதனை ஒரு தொழிலாக செய்தால் என்ன என்று அவருக்கு யோசனை வந்தது. சத்து மிகுந்த உணவுகளை தயாரித்து வழங்குவது என்று திட்டமிட்டார். தம்முடைய மகன் பெயரிலேயே நிறுவனத்தைத் தொடங்கி விட்டார். மகி குக்கரி லன்ஞ்பாக்ஸ் என்ற பெயரில் 2013-ம் ஆண்டு நிறுவனத்தைத் தொடங்கினார்.

தொடக்கத்தில் 2000 சத்துமிக்க உணவு பாக்ஸ்களை சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இலவசமாக கொடுத்தனர். இதன்பின்னர்தான் இவர்களுக்கு ஆர்டர் கிடைத்தது.

ஒரு லன்ஞ் பாக்ஸ் ஒன்றுக்கு ரூ.150-ரூ.200 வரை கட்டணம் நிர்ணயிக்கின்றனர். இதுதவிர இயற்கை உணவுப் பொருட்களைக் கொண்டு கிரீன் கேன்டீன் என்ற கருத்தாக்கத்திலும் உணவு வழங்குகின்றனர். இப்போது கொரோனா காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுகளை வழங்கிவருகின்றனர்.


Comments


View More

Leave a Comments