எப்போதுமே இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்...


சத்துகளை எடுத்த பின்னர் வெறும் சக்கையான உணவுகளை எப்போதுமே உண்ணாதீர்கள். அரிசி வெள்ளை வெளேர் என்று இருந்தால்தான் சாப்பிடுகின்றோம். இதனால், அரிசியில் இருக்கும் சத்துகள் எல்லாம் போய் வெறும் சக்கையான உணவைத்தான் உட்கொள்கின்றோம். வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தான, கேக் இவை எல்லாமே கெடுதல்தான். மைதா அல்லது கோதுமை மாவில் தயாரிக்கப்படும் இவற்றால் எந்த உடல் நலனும் இல்லை. உடல் நலனுக்குத்தான் கேடு. உடலில் சக்கரை அளவையும் இந்த உணவுகள் அதிகரிக்கக் கூடும்.

 

பதப்படுத்தப்பட்ட துரித உணவுகள் எப்போதுமே உடல்நலத்துக்குக் கெடுதல்தான். சுவையூட்டும் செயற்கை பொருட்கள் காரணமாக நன்றாக சுவையாக இருக்கிறது என்று துரித உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. முன்கூட்டியே தயாரித்து பதப்படுத்துவதற்காக ஊட்டச்சத்துகள் இருப்பதில்லை. உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.  எலும்புகள் பலவீனம் ஆகும். மலச்சிக்கல் போன்ற உடல் நலக்கோளாறுகள் ஏற்படலாம்.

குளிர்பானங்கள் மற்றும் பழசாறுகளையும் அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இயற்கையாக கிடைக்கும் பழங்களை, காய்கறிகளை சாப்பிட வேண்டும். அவற்றை பதப்படுத்தி அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் எந்தவித ஆரோக்கியத்துக்கான சத்துகள் ஏதும் இல்லை. பழசாறு அருந்துவதைவிடவும், பழமாக உண்பதுதான் சிறந்தது. அப்போதுதான் முழுபலனும் உடலுக்குக் கிடைக்கும்.

சந்தையின் நுகர்வில் முதலிடம் பிடித்திருக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸையும் அடிக்கடி உண்ணக்கூடாது. பொறித்து எடுக்கப்படும் உருளை கிழங்கு சிப்ஸ் ஆரோக்கியகுறைவானதாகும்.  பல்வேறு உடல்நலக் குறைபாட்டை உருவாக்கும்.


Comments


View More

Leave a Comments