அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்றவர்கள் சில காலத்துக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்


இப்போதெல்லாம் சுகபிரசவம் என்பதை இல்லாமல் போய்விட்டது. சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையில்தான் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகள் பிறந்த பின்னர் தாய்மார்களுக்கான உணவுமுறையில் பாரம்பர்யமாகவே சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. குறிப்பாக சிசேரியனில் குழந்தை பெற்றவர்கள் இதில் மிகவும் எச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகை பழங்கள் மிகவும் நல்லதுதான். ஆனால், சிசேரியனுக்குப் பின்னர் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எண்ணைய் மிதக்கும் உணவுகள், எண்ணையில் வறுத்தெடுத்த பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குழந்தை பிறந்த உடன் இது போன்ற எண்ணைய் உணவுகளை எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறுகள் உண்டாகும் என்பதால்தான் மருத்துவர்கள் இதை அறிவுறுத்துகின்றனர்.

கடினமான உணவுகளையும் இந்த காலகட்டத்தில் சாப்பிடக் கூடாது. குறிப்பாக ஜீரண சக்தியை குறைக்கும் உணவுகளை உண்ணவே கூடாது. தவிர்க்க வேண்டும். எளிதாக ஜீரணிக்கும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்ணுங்கள்.

அதிக காரமான உணவுகள் வயிற்றில் புண்ணை அதிகரிக்கும். எனவே, சிசேரியன் செய்தவர்கள் காரமான உணவுவகைகளை தவிர்க்க வேண்டும். சிசேரியன் காரணமாக ஏற்பட்ட வயிற்றுப் புண்கள் ஆறிய பிறகு மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். அதுவரை வேண்டாம். 


Comments


View More

Leave a Comments