முடி உதிர்வதைத் தடுக்க என்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும் தெரியுமா?


முடி உதிர்வதைத் தவிர்க்க ஷாம்பு வகைகள் எதையும் பயன்படுத்தத் தேவையில்லை. நான் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களைச் சேர்த்துக் கொண்டாலே முடி உதிர்வதைத் தவிர்க்க முடியும். 

குறிப்பாக வெந்தையம் நம் உடலுக்குக் குளிர்ச்சி தரும் என்பது எல்லோருக்கும் தெரியும். வெந்தயத்தில் வைட்டமின் ஈ நிறைவாக இருப்பதால் தினமும் காலையில் ஊறவைத்து சாப்பிடலாம். நாம் பயன்படுத்தும் உணவுகளில் வெந்தையத்தைச் சேர்த்தும் உண்ணலாம். 

முட்டையில் இருக்கும் புரதச்சத்துகள் முடி உதிர்வதைத் தடுக்கும். முடி வலுவாக இருப்பதற்கும் உதவும். இளம் வயதிலேயே முடி உதிர்வதைத் தடுக்க வளரும் குழந்தைகளுக்கு முட்டை உணவு தருவது சிறந்தது. 

நாவல் மரங்களிலிருந்து விழும் பழங்களைத் தின்பதற்குக் கூட இப்போது ஆட்கள் இல்லை. அந்த அளவுக்குச் சாலைகளில் இருக்கும் நாவல் மரங்களிலிருந்து விழும் பழங்கள் மண்ணோடு மண்ணாக மட்கிப் போய் மண்ணுக்கு உரமாகிவிடுகிறது. நாவல்பழத்தில் வைட்டமின் சி சத்து இருக்கிறது. முடியின் வேர்களை வலுப்படுத்தும் கொலாஜின் அடுக்குகள் உற்பத்திக்கு வைட்டமின் சி உதவுகிறது. இனிமேல் மரங்களிலிருந்து விழும் நாவல்பழங்களைச் சுவைக்க மறந்துவிடாதீர்கள். 

கொழுப்பு அமிலம், புரோட்டின் ஆகியவை நிறைந்த மீன் உணவுகள் முடி உதிர்வைத் தடுக்கும். மீன் உணவுகளில் வைட்டமின் ஏ இருப்பதும் முடி வளர்ச்சிக்கு உதவும். இது முடியில் இயற்கையாக எண்ணெய் பசையை ஏற்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கிறது. 

கீரை வகைகள் எல்லாமே உடல்நலத்துக்கு ஏற்றவைதான். குறிப்பாக பசலைக்கீரையை எடுத்துக் கொண்டால் முடி உதிர்வதைத் தடுக்க முடியும்.  


Comments


View More

Leave a Comments