கலப்படம் இல்லாத உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்


 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் அனைத்து உணவு பொருட்களிலும் இலாபத்திக்காக தரம் இல்லாத கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் கலக்கப்படுகிறது. கண்ணைக் கவரும் நிறமிகள், மணம் மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக இரசாயனங்கள் (PRESERVATIVES) சேர்க்கப்படுகிறது.
நவீன மற்றும் இயந்திரமயமாதலால் உணவு பொருட்களில் உள்ள ஊட்டசத்துக்கள் வீணடிக்கப்பட்டு சத்துக்கள் குறைந்த மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய உணவையே உட்க்கொள்ளுகிறோம்.
மக்கள் தொகை பெருகத்திற்கிற்ப உருவாக்கப்பட்ட ஒட்டு (Hybrid) இரகங்களில் அதன் வடிவங்கள் ஒரே மாதிரி இருந்தாலும் இயற்கையான நிறம் மணம் சுவை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் இருப்பதில்லை.
இதன் விளைவு மனிதனுக்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய ஆரோக்கியம் மற்றும் ஆயுள் குறைந்து நூறாண்டுகள் வாழ்வது என்பது அன்னப்பறவையை போன்று ஆச்சரியப்படும் ஒன்றாகிவிட்டது.
இதனை கருத்தில் கொண்டு மக்கள் பலரும் மரபு வழி விவசாயத்திற்கும் பாரம்பரிய உணவு பொருட்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க துவங்கியுள்ளனர்.
இதை ஊக்குவிக்கும் விதமாக கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் ஐஸ்வர்யம் இயற்கை உணவு நிறுவனம் தமிழகம் முழுவதுமுள்ள பாரம்பரிய நாட்டு இரக பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெற்று மக்களுக்கு வழங்குகிறது.
இதன் மூலம்,
முதல் தரமான,
கலப்படங்களற்ற,
இரசாயனங்களற்ற,
பாரம்பரிய முறையில் உருவான,
மரபு வழி நாட்டு இரக,
உணவு பொருட்கள் பெற முடிகிறது.
நம் மூதாதையர்கள் காலத்து உணவின் ஆரோக்கியத்தையும் இனிய சுவையையும் அறிய செய்யும் முயற்சியை ஆதரிப்போம்! பகிர்வோம்! நன்றி!!!
இலவச டோர் டெலிவரி செய்யப்படும்.

நன்றி; இயற்கை உணவுகள்  முகநூல் பதிவு

Comments


View More

Leave a Comments