இந்தியாவில் அஜினோ மோட்டோவின் விற்பனை எப்படி இருக்கிறது?


ஜப்பான் நிறுவனமான அஜினோ மோட்டோ உலகில் சீனா, தாய்லாந்து, கொரியா, ஜப்பான், வியட்நாம், மலேசியா, மெக்சிகோ, ஆப்ரிக்க நாடுகள்  உள்ளிட்ட 130 நாடுகளில் விற்பனை ஆகிறது.  இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு தாய்லாந்து நாட்டில் உள்ள தொழிற்சாலையில் அஜினோ மோட்டோ தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2003 ம் ஆண்டில் இருந்து அஜினோ மோட்டோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 64,000 டன் அஜினோ மோட்டோ விற்பனை ஆகிறது.

இந்திய சைவப் பிரியர்களை கவர்வதற்காக அஜினோ மோட்டோ மரவள்ளிக்கிழங்கு, கரும்பில் இருந்து கிடைக்கும் மொலாசஸ், மக்காசோளம், கோதுமை, அரிசி ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுவதாக அஜினோ மோட்டோ நிறுவனம் சொல்கிறது.

இந்தியாவில் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுடெல்லி, மிசோரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அஜினோ மோட்டோ அதிக அளவில் விற்பனை ஆகிறது.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டசத்து நிபுணராக உள்ளார். அவர் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூறும்போது, அஜினோமோட்டவை உலக நாடுகள் அனுமதித்துள்ளன. எனினும், தொடர்ச்சியாக அஜினோமோட்டோவை உபயோகிக்கும்போது அடிவயிற்றில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தைராய்டு செயல்பாட்டில் பிரச்னைகள், ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை ஏற்படலாம். குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவுகளை நிச்சயம் கொடுக்கக் கூடாது என்கிறார்.


Comments


View More

Leave a Comments