பலரது கவனத்தை ஈர்த்த மாற்றுத்திறனாளி உணவு டெலிவரி ஏஜென்ட்


உணவு விநியோகிக்கும் டெலிவரி ஏஜென்ட் ஆகப் பணியாற்றும் மாற்றுத்திறனாளி பெண் சக்கர நாற்காலியில் உணவு விநியோகம் செய்வதை  மகளிர் ஆணையத் தலைவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

உணவு விநியோக முகவரின் வீடியோவை டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பெண் பிரபலமான ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளமான ஸ்விக்கியில் பணிபுரிவதாக தெரிகிறது.

Must Read: சித்தமருத்துவத்தில் சாத்தியமான கருப்பை மென்கழலை கட்டிகள் அகற்றல்..

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள, ​​மாலிவால் “நிச்சயமாக வாழ்க்கை கடினமானது, இந்த உணர்ச்சிமிக்க ஆத்மாவுக்கு நான் தலை வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 44,000 பார்வைகளைப் பெற்றுள்ளது. அடையாளம் தெரியாத டெலிவரி ஏஜென்ட் காட்டிய மன உறுதியையும் கடின உழைப்பையும் பலர் பாராட்டியுள்ளனர்

மாற்றுத்திறனாளி பெண்ணின் உணவு விநியோகம்

“ஆம், அந்தப் பெண்ணுக்கும் அவரது கடின உழைப்புக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். ஆனால் அது என்னை சிந்திக்க வைக்கிறது. ஒரு சமூகமாக இருந்தாலும் சரி, அரசாங்கமாக இருந்தாலும் சரி மாற்றுதிறனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறுகிறோம். எனவே அவர்கள் அத்தகைய கஷ்டத்தை கடக்க வேண்டும்”     என ஒரு பதிவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு நபர்  "தங்கள் சூழ்நிலைகளை மாற்ற போராடுபவர்கள் மற்றும் விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும் உள்ளனர்  அவர் ஒரு போராளி " என தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி டெலிவரி ஏஜென்ட்டின் வீடியோ வைரலாவது இது முதல் முறையல்ல. இந்த ஆண்டு ஜூலை மாதம், உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோவின் டி-ஷர்ட் அணிந்த நபர் சக்கர நாற்காலியில் பிஸியான தெருவில் செல்லும் வீடியோ பரவலாகப் பரப்பப்பட்டது. 2019 ஆம் ஆண்டில், Zomato ஊழியர் ராமு தனது சக்கர நாற்காலியில் பிஸியான தெருக்களைக் கடக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, அவருக்கு அந்த நிறுவனம் மின்சார வாகனத்தை பரிசளித்தது.

#FoodDeliveryAgent   #FoodDeliveryonWheelchair  #FoodDelivery


Comments


View More

Leave a Comments