அரிசியில் என்னென்ன சத்துகள் உள்ளன என்று தெரியுமா?
நமது வயலில் விளையும் நெல்லை அறுவடை செய்து, நெல்லை மிஷினில் கொண்டு போய்அரைத்து அரிசியாக்கி சாப்பிட்டு வந்தவர்கள் நாம். ஆனால், இந்த அவசரகால உலகில் இப்போது அதற்கெல்லாம் நேரம் இல்லை. அறுவடை செய்த நெல்லை அப்படியே விற்று விடுகின்றோம்.
சாப்பிடுவதற்கான அரிசியை கடைகளில் இருந்து வாங்குகின்றோம். அரிசியில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வது நமக்கு நல்லது. நெல்லை வேக வைத்து தயாரிக்கப்படும் புழுங்கல் அரிசியில் ஏகப்பட்ட சத்துகள் உள்ளன. பழைய அரிசியில் இருந்து கிடைக்கும் சத்துகளும் அதிகம். எனவேதான் கடைகளில் பலர் பழைய அரிசி என்று கேட்டு வாங்குகின்றனர்.
அதே போல அரிசிகளில் சிவப்பு அரிசியில் சத்துகள் அதிகமாக உள்ளன. நார்சத்துகள் அதிகம் உள்ளன. நமது பெருங்குடலில் புற்று நோயை உண்டாக்கும் வேதியியல் பொருட்கள் சேராத வண்ணம் இந்த நார்சத்துகள் தடுக்கின்றன. சிவப்பு அரிசி உண்பதால் பற்கள், நகங்கள் போன்ற நமது உடல் உறுப்புகள் வலிமை பெறும்.
Comments