வெரிகோஸ் வெயின் குறித்த பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கம்…
வெரிகோஸ் வெயின் என்பது என்ன?
வெரிகோஸ் வெயின் விளக்கம்
வெரிகோஸ் வெயின் அறிகுறிகள்
வலது காலின் பின்புறம் Varicose vein போல ஒரு நரம்பு இருக்கு இப்போ ஒரு 3 மாசத்துக்கு முன்னால தான் அதை பார்த்தேன்.இதை என்ன பண்ணி ஆரம்பத்திலேயே சரி செய்யலாம் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.
வெரிகோஸ் வெயின் Varicose Vein என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சுருள் சிரை நரம்பு என்றும், வீங்கி பருத்து வலிக்கும் நரம்பு என தமிழிலும் அழைக்கப்படுகிறது.
வால்வு'ன்னு கேள்வி பட்டிருப்பீங்க, சைக்கிள் ட்யூப்ல இருந்து நம்ம இதயம் வரைக்கும் இருக்கிற ஒரு மேட்டர்..அப்படீன்னா என்ன? ட்யூப்க்கும் வால்வுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இரத்தமோ காற்றோ அதை இரண்டு பக்கமும் அனுப்பினா ட்யூப். ஒரு பக்கம் மட்டும் அனுப்பும், அடுத்த பக்கம் ரிடர்ன் அடிக்க விடாது அது தான் வால்வு.
Must Read: காய்ச்சலிலின் போது கடைபிடிக்க வேண்டிய உணவு முறை…
காற்றை உள்ளே அடிக்கலாம் வால்வு வெளிய வராம பாத்துக்கும், அதே மாதிரி இரத்தம் உடலில் கீழே இருந்து மேல் நோக்கி போக விடும் திரும்ப கீழே ரிடர்ன் அடிக்க விடாது. காலில் இருக்கிற தசைகளும் இரத்த குழாயின் வால்வுகளும் சேர்ந்து தம் பிடிச்சு பம்ப் பண்றதால தான் புவியீர்ப்பு சக்தியை மீறி இரத்தம் மேல் நோக்கி பாயுது. ஓகேவா?
இப்போ இந்த வால்வுகள் பழுதடைஞ்சு இரத்தம் ரிடர்ன் அடிச்சா பிரஷர்ல குழாய்கள் தடிச்சு புடைக்கும். காலில நிறைய பேருக்கு நரம்பு சுருண்டு சுருண்டு இருப்பதை பாத்திருப்பீங்க... அது தான் 'வேரிகோஸ் வெய்ன்' (Varicose Vein) நேரிடுவதற்கு காரணம்.
தொடர்ச்சியாக நிற்பது, நடப்பது, பளு தூக்குவது போன்ற இரத்த குழாய்களுக்கு ப்ரசர் அதிகம் குடுக்கிற வேலைகளால இது பழுதடையுது, அது பார்க்க அசிங்கமா இருக்குன்னு தான் பெரும்பாலும் ட்ரீட்மென்ட்க்கு வருவாங்க, அதை தவிர்த்து வலியும் நாளடைவில் ஆறாத புண்ணையும் ஏற்படுத்த கூடியது.
Must Read: டெங்கு பாதிப்பில் இருந்து மீள உதவும் கரிசலாங்கண்ணி கீரை…
நிற்பதை தவிர்ப்பது, மீறி நிற்க வேண்டியவர்கள் காலில் டைட்டான பேண்டேஜ் சுற்றி கொள்வது மூலமா இதை தவிர்க்கலாம். பெரும்பாலும் கான்ஸ்டபிள்ஸ், பளு தூக்குபவர், கண்டக்டர், டீகடை மாஸ்டர் போன்றவர்களுக்கு வரும்.
காலில் மட்டுமல்லாமல் உடலின் வேறு பல பகுதிகளிலும் இது வர வாய்ப்பிருக்கு. பைல்ஸ் கூட இதுல ஒரு கிளை தான். உயிருக்கு ஆபத்தில்லைன்னாலும் இது கொஞ்சம் இம்சை பிடிச்சது தான் ஹோமியோபதி மருந்துகள் இதுக்கு நல்லா வேலை செய்யும். வேரிகோஸ் மருந்துன்னு கேட்டா Varicose vain oil & drops கிடைக்கும். அதை எடுங்க அதிகமாகாது. நிக்குறதை குறைச்சுக்கோங்க. மருந்து தொடர்ந்து எடுக்க, தொந்தரவுகள் சரியாகும்.
பொறுப்புத் துறப்பு; இது பொதுவான ஆலோசனை குறிப்பு மட்டுமே. உங்களுடைய மருத்துவரிடம் உரிய ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டியது அவசியம்.
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments