வேளாண்மை சார்ந்த மூன்று பயிற்சிகளில் பங்கேற்க மறவாதீர்....


குக்கீஸ் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாச்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 10ஆம் தேதி விதவிதமான குக்கீஸ், ரெட்வெல்வெட் குக்கீஸ், கராச்சி பிஸ்கெட் மற்றும் பட்டர் குக்கீஸ் ஆகியவற்றின் தயாரிப்பு முறை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

மேலும், தேனீ வளர்ப்பு பயிற்சியில் தேனீ வளர்ப்பு சாதனங்கள், பராமரிப்பு நுட்பங்கள், தேன் சார்ந்த பொருட்கள் அறுவடை செய்தல், பதப்படுத்துதல் குறித்து செயல்முறை விளக்கம் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 044-29530048 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Must Read: வேளாண்மை பயின்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் வாய்ப்பு என்ன தெரியுமா?

 “ஆடிப் பட்டம் தேடி விதை “ ஒரு நாள் பயிற்சி

விதைகளே பேராயுதம் என்பதை உணர்ந்த நம்மாழ்வார் ஐயா அவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து உழவர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்த ” மண்ணின் மரபு விதை “ சார்ந்த வாழ்வியலை இனிவரும் இளம்தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுப்பதற்கான முயற்சிகளை செயல்வடிவம் கொடுத்தார்.

மேலும் உழவர்களின் விதை உழவர் கையில் இருக்க வேண்டும் என்பதற்காக “ விதைப்பு தொடங்கி விதை பகிர்வு வரையிலான நுட்பங்களை எதிர்வரும் தலைமுறை அறியும் வண்ணம் பயிற்சி வடிவில் கைமாற்றிக் கொடுத்தார்.

விதை குறித்த பயிற்சி

அதன் தொடர்ச்சியாக “ வானகம் “ அமைப்பானது நம்மாழ்வார் பிறந்த நாளை மரபு விதை நாளாக கொண்டாடியும், மரபு விதை சேகரிப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் தொழில்நுட்ப அனுபவ அறிவை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.

அதன்படி, வருகிற 12ஆம் தேதி சனிக்கிழமை காலை 10மணி முதல் மாலை 5மணி வரை  பகுதிசார்ந்த மரபு விதையின் அவசியம் ,  பருவங்கள், பட்டங்களின் முக்கியத்தும்,  விதைப் பன்மயமம், பயன்படுத்தும் முறை,  விதை முதல் விதை வரை உற்பத்தி, பராமரிப்பு,   விதையின் அரசியல், கைமாற்றிதலின் அவசியம் ஆகியவை குறித்து பயிற்சியாளர் திரு.இரா.வெற்றிமாறன் அவர்கள் நம்மோடு பல அனுபவங்களைப் பகிர வருபவர்

 “வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,சுருமான்பட்டி, கடவூர் – 621311 , கரூர் மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக்காக நன்கொடை ரூ. 500/- பெறப்படும். இந்த தொகை திருப்பி தரப்படமாட்டாது. பயிற்சியின்போது மூலிகை தேநீர், உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்

Nammalvar Ecological Foundation :

A/C No: 137101000008277

IFSC Code : IOBA0001371

Bank Name : Indian Overseas Bank,

Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

முன்பதிவு அவசியம். எனவே, முன்பதிவு செய்ய +91 86680 98492,  91 86680 98495 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். வாட்ஸ் ஆப் தகவல் அனுப்ப  +91 94458 79292 என்ற எண்ணை பயன்படுத்தலாம்.

பயிற்சியின்போது வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது.  பயிற்சி நிகழ்விடம் குறித்த கூகுள் வரைபடம் குறித்த தகவலுக்கு  https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19

இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி 

தமிழ்நாடு இயற்கை வேளான் கூட்டமைப்பு  சார்பில் வரும் 25, 26  ஆகிய தேதிகளில் பொதிகைச் சோலை வாசுதேவநல்லூர், சிவகிரி, தென்காசி,  627760 என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி நன்கொடையாக ரூ 2000 வசூலிக்கப்படும். பாமயன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் பயிற்சியளிக்கின்றனர். பயிற்சியில் 30 பேர் மட்டுமே அனுமதி. முன் பதிவுக்கு - bit.ly/tnivk-training  என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.பயிற்சியில் பங்கேற்க GPay மூலம் பணம் செலுத்த 8939138207 என்ற மொபைல் எண் அல்லது gkarthik.gunasekar@okaxis  என்ற யுபிஐ ஐடியை பயன்படுத்தி செலுத்தலாம்.

இயற்கை வேளாண் பயிற்சி

பயிற்சி பற்றிய தகவல்களுக்கு கார்த்திக் குணசேகர் அவர்களை 91-8939138207 / 91-9962043710 ஆகிய மொபைல் எண்கள் அல்லது  tnivk2023@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

மதுரையில் இருந்து ராஜபாளையம் வழியாக வருபவர்கள்: ராஜபாளையத்தில் இருந்து தென்காசி, குற்றாலம், செங்கோட்டை செல்லும் பேருந்துகளில் தரணி சுகர்மில்  நிறுத்துவார்களா என்று கேட்டு ஏறவும். தரணி சுகர்மில் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் வரவும், ஆட்டோவுக்கு +919791862018 என்ற எண்ணை அழைக்கவும். ஆட்டோ கட்டணம் 200 ரூபாய் தர வேண்டியிருக்கும்.

தென்காசி வழியாக வருபவர்கள்: ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி தரணி சர்க்கரை ஆலையில் இறங்கவும், அங்கிருந்து ஆட்டோவில் வரவும். ஆட்டோவிற்கு +919791862018 என்ற எண்ணை அழைக்கவும். ஆட்டோ கட்டணம் 200 ரூபாய் தர வேண்டும்.

 #organicagritrainingcamps #agricultureonedaytraining #agritraining 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம் 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 


Comments


View More

Leave a Comments