இயற்கை வேளாண்மை, உணவு சார்ந்த இரு நிகழ்வுகளை மறவாதீர்..
பாரம்பரிய விதைகள், உணவுத் திருவிழா
மூன்று நாள் இயற்கை வேளாண் பயிற்சி
பிப்ரவரி மாத நிகழ்வுகளை மறக்காதீர்
தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி மாதம் கீழ்கண்ட இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற உள்ளன. விவரங்களை அறிய தகவலில் குறிப்பிட்ட மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். இந்த தகவல்கள் முழுக்க, முழுக்க சேவை அடிப்படையில் மட்டுமே வெளியிடப்படுகிறது.
திருப்பத்தூரில் பாரம்பரிய விதைகள் மற்றும் உணவுத் திருவிழா
தை பிறந்தால் வழி பிறக்கும்… இம்முறை தை பிறந்ததால் இயற்கை விவசாயத்திற்கான வழி திருப்பத்தூரில் பிறக்கிறது… திருப்பத்தூர் மவட்டத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் 4ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பாரம்பரிய விதைகள் மற்றும் உணவுத் திருவிழா இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்ட இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கிறது.
பாரம்பரிய அரசி ரகங்கள், சிறுதானிய உணவுகள், விதைகள், நஞ்சில்லா கீரை, காய்கள், பாரம்பரிய உணவுக் கண்காட்சி, விவசாய இடுபொருள் பயிற்சி, மூலிகை மற்றும் புத்தகக் கண்காட்சி என விழாக்கோலத்தில் குதூகலிக்கப் போகிறது திருப்பத்தூர்!
Must Read: மரக்கன்றுகள் நட ஏற்ற மாதம் எது தெரியுமா?
மாலை மூன்று மணி அளவில் மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல்லுணவு குறித்து சிறப்பு உரை நிகழ்த்துகிறார்! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.தெ.பாஸ்கரபாண்டியன் அவர்கள் துவங்கி வைக்க, காலையிலிருந்து இயற்கை உணவுகளுக்கான சந்தை நடைபெறுகிறது.
திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு நஞ்சில்லா உணவுகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் தொடக்கம் இது! பல நல்ல உள்ளங்கள் கைக்கோர்த்திருக்கின்றன!...
திருப்பத்தூர் பசுமை சந்தைக்கான தொடக்கமும் காத்திருக்கிறது… கொரோனாவுக்கு முன்பே தொடங்கவிருந்த மிகப்பெரும் செயல்பாடு இது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஷயங்களில் திருப்பத்தூர் பசுமை சந்தையும் ஒன்று… எது எப்படியோ இப்போது தொடங்க இருக்கிறது…
திருவிழாவில் அரங்குகள் அமைக்க திரு.அச்சுதானந்தம் 9786621652, திரு.அன்பழகன் 9952675026, திரு.முத்தமிழ் 9150308097 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
வானகம் நடத்தும் மூன்று நாட்கள் பயிற்சி முகாம்
மூன்று நாள் இயற்கை வேளாண்மை பயிற்சி வரும் 09.02.2024 முதல் 11.02.2024 வரை மூன்று நாட்கள் நடைபெறும். இப் பயிற்சியில் :இயற்கை வழி வேளாண்மை, மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல், மழை நீர் அறுவடை, உயிர்வேலி, ஒருங்கிணைந்த பண்ணை, இடுபொருள் செய்முறை பயிற்சி ஆகியவை வழங்கப்படும்.
Must Read: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 இயற்கை உணவுகள்
இது தவிர களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம், கால் நடை பராமரிப்பு, நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு, மரபு விளையாட்டு ஆகியவை இடம்பெறும். வானகம் கல்விக் குழுவினர் பயிற்சியை வழங்குவார்கள். வருகிற 09, பிப்ரவரி 2024 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி 11 பிப்ரவரி 2024 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.
“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம், சுருமான்பட்டி, கடவூர்,கரூர் மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி நன்கொடை : ரூ 2,300/ (non-refundable)மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். தங்குமிடம் உணவு வழங்கப்படும். முன்பதிவு அவசியம். 8668098492,8668098495, 94458 79292 ஆகிய மொபைல் எண்களில் ஏதேனும் ஒன்றில் முன்பதிவை உறுதி செய்யவும் .
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்
Nammalvar Ecological Foundation
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது) அரசு அறிவுறுத்தும் பெருந்தொற்று விதி முறைகளை பின்பற்ற வேண்டும். வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
பாலித்தின் பைகள், சோப்பு,ஷாம்பு, பேஸ்ட்,கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு; https://vanagam.org https://vanagam.page.link/app
#AgriEvents #OrganicTraining #NaturalLife #organicfoodfestival
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments