புற்றுநோயை தடுப்பதற்கான உணவு முறைகள்
உணவில் பூண்டு முக்கியம்
* வேலையை எளிதாக்குவதற்கும் ஆடம்பரத்துக்கும், நாம் கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்குவதை விடுங்கள். முக்கியமாக மசலாப் பவுடர்களை வீட்டிலேயே அரைத்துக் கொள்வதாக இருக்கட்டும்.. ரீஃபைண்ட் ஆயில், ரீஃபைண்ட் சர்க்கரை, ரீஃபைண்ட் உப்பு போன்றவை வேண்டவே வேண்டாம். #பூண்டு கேன்சரை வரவிடாமல் தடுப்பதிலும் வந்தவர்களுக்கு அதை விரைந்து குணப்படுத்துவதிலும் முக்கிய பங்குடையது
தினமும் 4 பூண்டு பற்களை மென்று தின்றால் போதும், பூண்டில் உள்ள அலிஸின் என்ற ஆன்டி ஆக்ஸிடெண்ட், உடலில் தங்கி கேன்சரை உருவாக்கும் ஃப்ரிரேடிகல் என்ற தீங்கான செல்களை வெளியேற்ற உதவும் நியூட்ரிசின்களை உடலில் அதிகரிக்கிறது. உடலை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாற்றுகிறது. பூண்டை வேகவைத்து சாப்பிடும்போது, அதிலுள்ள ”அலிசின்” சிதைவதால், பூண்டை பச்சையாக சாப்பிடுவதே முழுபலன் அளிக்கும்.
பசலை கீரையும் நல்லது
#பசலைகீரை கேன்சருக்கு மருந்து. பசலைகீரை சாப்பிட்டால் உடலில் தங்கியுள்ள நச்சுத்தன்மையான ஃப்ரீரேடிகல் செல்களை வெளியேற்றுகின்றன. #கேரட் கேரட்டில் அதிகமுள்ள பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடெண்ட், கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துவதோடு, அது நமது உடல் செல்களை அழிப்பதையும் தடுக்கிறது. #பசலைக்கீரையையும்_கேரட்டையும் தனிதனியாக ஜூஸ் செய்து, பின்னர், ஒன்றாக கலந்து அதில் ஏலக்காய், தேன் கலந்து சாப்பிடுவது கேன்சருக்கு மிகச்சிறந்த ட்ரீட்மெண்டாக அமையும். வராமலும் தடுக்கலாம். இதை கர்ப்பிணிகளுக்கு கொடுத்தால் தாயும் குழந்தையும் மிக ஆரோக்கியமாக இருப்பார்கள். இதுதவிர, நீரிழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நோய்களையும் குணப்படுத்த வல்லது.
தக்காளியை அப்படியே சாப்பிடுங்கள்
#தக்காளி யின் சிவப்பு நிறத்துக்கு அதில் உள்ள லிகோபின் என்ற ஆன்டி ஆக்ஸிடெண்டே காரணம். இது கேன்சர் செல்களை எதிர்க்கும் தன்மை கொண்டது. உடல் செல்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி, இன்ஃபெக்ஷன் மற்றும் கேன்சரை ஏற்படுத்தும் இன்ஃப்ளமேஷன் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. குறிப்பாக, பெண்களின் ப்ரெஸ்ட் கேன்சர், மற்றும் குடல் சம்பந்தமான கேன்சரையும் ஆண்களின் ப்ராஸ்டேட் கேன்சரையும் குணப்படுத்த வல்லது.தக்காளியை அதிகம் வேகவைத்தால் அதில் உள்ள லிகோபின் சிதைந்துவிடும் என்பதால், பச்சையாகவோ, ஆஃப் பாயிலாகவோ சாப்பிடலாம்.
* #ஸ்ட்ராபெர்ரி யில் அந்த்ரோசயனின் என்ற ஆன்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இது கேன்சரை உருவாக்கும் இன்ஃப்ளமேஷன் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. குறிப்பாக, ஜீரணமண்டலத்தில் ஏற்படும் கேன்சரை தடுக்கிறது. ஞாபகசக்தியை அதிகரிப்பதிலும் இதற்கு பங்கு உண்டு.இதை தனியாகவும் சாப்பிடலாம், தேங்காய்பால், ஏலக்காய், தேன், உலர்ந்த திராட்சை ஆகியவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
#CancerCureFoods #FoodsForCancer #Cancer #FoodDietForCancer
Comments