
ஸ்விக்கி நிறுவனம் 380 பேரை வீட்டுக்கு அனுப்பியது
உணவு விநியோக துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தனது நிறுவனத்தில் பணியாற்றிய 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,. "எங்கள் வணிகத்தின் திட்டமிட்ட முன் கணிப்புகளுக்கு மாறாக உணவு விநியோகத்துறையின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
எனவே எங்களது லாப இலக்குகளை அடைய, ஒட்டுமொத்த மறைமுக செலவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது" என்று இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீஹர்ஷா மஜெட்டி கூறினார்.
Must Read: 10 நிமிட உணவு விநியோகச் சேவை புதிய வடிவில் வரும்; ஜொமாட்டோ அறிவிப்பு
ஸ்விக்கி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "உள்கட்டுமானம், அலுவலகம்/வசதிகள் போன்ற பிற மறைமுகச் செலவுகள் மீது நாங்கள் ஏற்கனவே நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தாலும், எதிர்காலத்திற்கான கணிப்புகளுக்கு ஏற்ப நமது ஒட்டுமொத்த பணியாளர்களின் செலவுகளையும் சரியாக அளவிட வேண்டிய தேவை எழுந்துள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் 3 மாதங்களுக்கு குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட சம்பளத்தைப் பெறுவார்கள், இதில் 100 சதவீதம் மாறக்கூடிய ஊதியம்/ஊக்கத்தொகைகளும் அடங்கும். பாதிக்கப்படும் ஊழியர்கள் தங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் 31 மே, 2023 வரை மருத்துவக் காப்பீட்டைப் பெறுவார்கள் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஸ்விக்கி நிறுவனம் தனது இறைச்சி சந்தையை மிக விரைவில் மூடப்போவதாகவும் நிறுவனம் கூறியது. மேலும், ஆன்லைன் உணவு விநியோக தளத்தின் இழப்பு கடந்த நிதியாண்டில் ரூ.1,617 கோடியுடன் ஒப்பிடுகையில், நிதியாண்டில் ரூ.3,629 கோடியாக இருமடங்காக அதிகரித்துள்ளது.
2022 நிதியாண்டில் மொத்த செலவுகள் 131 சதவீதம் அதிகரித்து ரூ.9,574.5 கோடியாக உயர்ந்துள்ளது என்று அதன் வருடாந்திர நிதிநிலை அறிக்கை கூறுகிறது. ஸ்விக்கியின் வருவாய் 2021 நிதியாண்டில் ரூ. 2,547 கோடியாக இருந்து 2022 நிதியாண்டில் ரூ.5,705 கோடியாக 2.2 மடங்கு அதிகரித்துள்ளது.
-ரமணி
#swiggydelivery #swiggy #swiggylayoff
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments