10 நிமிட உணவு விநியோகச் சேவை புதிய வடிவில் வரும்; ஜொமாட்டோ அறிவிப்பு


ஜொமாட்டோ தனது 10 நிமிட உணவு விநியோக சேவையான ஜொமாட்டோ இன்ஸ்டன்ட்' ஐ நிறுத்தி விட்டதாக செய்திகள் வெளியாயின. இந்த நிலையில் அந்த  சேவையை நிறுத்தவில்லை என்று ஜொமாட்டோ  தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தங்கள் நிறுவனத்தில் எந்த ஊழியரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

"இன்ஸ்டன்ட் விநியோகச் சேவை நிறுத்தப்படவில்லை. நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் புதிய மெனுவை உருவாக்கி வணிகத்தை மறுபிராண்ட் செய்கின்றோம். மேலும் இந்த முடிவால் ஊழியர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்," என்று ஜொமாட்டோ  வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

Must Read: நாம் ஏலக்காயுடன் ரசாயனங்களையும் சேர்த்து உண்கின்றோமா?

ஜொமாட்டோவின்  போட்டி நிறுவனமான ஸ்விக்கி 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததால் உணவு விநியோக சேவை நிறுவனங்களில் பணிநீக்கம் இருக்கும் என்ற அச்சம் நிலவியது. இந்த நிலையில்தான் ஜொமாட்டோ இதனை தெளிவு படுத்தியுள்ளது. 

ஜொமாட்டோ

ஜொமாட்டோ  இன்ஸ்டண்ட் சேவை கடந்த ஆண்டு மார்ச்சில் தொடங்கப்பட்டது, 30 நிமிட சராசரி டெலிவரி நேரம் என்பது விரைவாகத் தேவைப்படும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டது.

இது குறித்து கடந்த ஆண்டு பேசிய ஜோமாட்டோ தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல், "வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு விரைவான சேவையை அதிகளவில் கோருகின்றனர். அவர்கள் திட்டமிட விரும்பவில்லை, அதே போல காத்திருக்கவும் விரும்பவில்லை.

எனவேதான் இந்த சேவையை நாங்கள் தொடங்கினோம். எனினும் 30 நிமிட சராசரி டெலிவரி நேரம் மிகவும் தாமதம் என்று உணர்கின்றோம், இதனால் இந்த விநியோக முறை மக்களிடம் வரவேற்பை பெறாமல் வழக்கற்றுப் போகும்,”  என்று கூறினார். 

"தொழில்நுட்பத் துறையில் நீடித்திருப்பதற்கான ஒரே வழி புதுமைகளை உருவாக்குவதும், முன்னணியில் இருந்து முன்னேறுவதும் ஆகும். இதோ... எங்களின் 10 நிமிட உணவு விநியோகம் -ஜொமாட்டோ இன்ஸ்டன்ட்," என்று இந்த சேவை தொடங்கப்பட்ட சமயத்தில்  கோயல் குறிப்பிட்டார். 

கடந்த ஆண்டு பரிசோதனை அடிப்படையில் இந்த முறை தொடங்கியபோது, ஒரு பகுதிக்கு 20 முதல் 30 வரை அடிக்கடி ஆர்டர் செய்யப்படும் உணவுப் பொருட்களை முன் கூட்டியே கணித்து, குறிப்பிட்ட உணவகங்களில் அதனைப் பெற்று, ஜோமாட்டோ  ஃபினிஷிங்  பிரிவுகள் வாயிலாக உணவை விரைவாக சூடாக்கி  10 நிமிடங்களுக்குள் வழங்குவது என திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பா.கனீஸ்வரி 

TAGS: #DeepinderGoyal #Zomato Instant  ##Zomato

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் 

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 
 

Comments


View More

Leave a Comments