வெங்காயத்தின் நன்மைகள்; ஜலதோஷம் முதல் முடி உதிர்வதை தடுப்பது வரை பலன் தரும்
வெங்காயம்னாலே கிண்டலா சொல்வாங்க. பெரியார் எப்பவுமே கடவுளையும், மதத்தையும் வெங்காயம்னுதான் சொல்வார். வெங்காயம்னா விதை இல்லாதது, வெறும் சதைனு சொல்வார். அதுமட்டுமில்ல வெங்காயம்னா அதுக்கு பொருள் வெறும் காயம், உயிரற்ற உடல்னு சொல்லிக்கிட்டே போகலாம்.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த வெங்காயத்துக்கு நிறையவே மருத்துவக்குணம் இருக்கு.வெங்காயத்துல சின்ன வெங்காயமும், பெரிய வெங்காயமும் நம்ம பயன்பாட்டுல இருக்கு. அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு நிறையவே சக்தி இருக்கு.
Must Read: ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை; அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்தான கீரை
ஜலதோஷம்னு வந்துட்டா ஒரு சின்ன வெங்காயத்தை சவச்சி சாப்பிட்டு (மென்று தின்னுதல்) சுடுதண்ணி குடிச்சா ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் சட்டுனு நின்னுரும். அதுமட்டுமில்லாம நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் நிக்கும்.
வெங்காயம் கிருமிகளை பரவ விடாம தடுத்து நிறுத்தும். முக்கியமா அம்மை நோய் வந்தா மோர்கூட சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சிட்டு வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமில்லாம வீட்டுல மத்தவங்களுக்கு வராம தடுக்கவும், ஊரெல்லாம் அம்மை நோய் பரவியிருந்தாலும் அந்த நேரத்துல வீட்டைச்சுத்தி அங்கங்க சின்ன வெங்காயத்தை துண்டு துண்டா வெட்டிப்போடுங்க.
அம்மை நோய்க்கிருமிகள் எல்லாத்தையும் அந்த சின்ன வெங்காயம் இழுத்துக்கிடும். முக்கியமா மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா வெங்காயம் சேர்த்துக்கிடுறது நல்லது. முக்கியமா வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணை விட்டு வதக்கி சாப்பிட்டா மூல உபத்திரவம் குறையும்.

நீர் மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க சின்ன வெங்காயத்தை லேசா வதக்கி கட்டினா பலன் கிடைக்கும். பொடுகுத்தொல்லையால அவதிப்படுறவங்க, முடிகொட்டி அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் பலன் தரும்.
முதல்ல சின்ன வெங்காயத்தை மையா அரைச்சிக்கோங்க. அதோட நாட்டுக்கோழி முட்டையில வெள்ளைக்கருவை மட்டும் நல்லா அடிச்சிக்கோங்க... ஷாம்பு மாதிரி வரும். அதோட வெங்காயத்தை சேர்த்து ஒரு கலக்கு கலக்கி அதை அப்பிடியே தலையில தேய்ச்சி அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிங்க. முட்டை நாத்தம் போகறதுக்கு நல்ல சீயக்காயை (மீரா சீயக்காய் போடலாம்) போட்டு தேய்ச்சி குளிக்கணும். இதை வாரத்துல ஒருநாள்னு ரெண்டு மாசம் செஞ்சிட்டு வந்தீங்கன்னா கைமேல பலன் கிடைக்கும்..
Must Read: சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதே ஊட்டசத்து குறைபாட்டுக்கான தீர்வு…
சின்ன வெங்காயத்தை தேன் விட்டு வதக்கி ராத்திரியில சாப்பிடறதோட பசும்பால் குடிச்சீங்கன்னா ஆண்மை அதிகரிக்கும். தாம்பத்ய உறவுக்கு முன்னாடி சின்ன வெங்காயத்தை வாயில போட்டு அதோட சாறை கொஞ்சம் கொஞ்சமா விழுங்கினீங்கனா நல்ல பலன் கிடைக்கும். பொதுவாவே வெங்காயத்தை நல்லெண்ணெய் இல்லைன்னா நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தா நரம்புத்தளர்ச்சி சரியாகும்.
#KnowTheOnion, #OnionHealthBenefits, #Pattivaithiyam
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More