
சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதே ஊட்டசத்து குறைபாட்டுக்கான தீர்வு…
சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவின்(IITM Research Park) தொழில்முனைவோருக்கான ஆதரவு மையத்தின் மூலம் சிறுதானியங்களை மையமாக வைத்து தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக “குக்காதான்”, சிறுதானிய சமையல் போட்டி நடைபெற்றது.
மாநிலம் முழுவதிலிருந்து பெண்கள் மற்றும் ஆண்கள் , சுய உதவிக்குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினை சார்ந்தவர்கள் என பலரும் ஆர்வமாகக் கலந்து கொண்டனர். சுமார் 160 பேர்கலந்து கொண்டவர்களில் முதல் சுற்றில் 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
Must Read: பூச்சிகள் அறிவை குழந்தைகளுக்கு கடத்திய நிகழ்வு
வீடியோ காட்சிகள் மற்றும் கேள்விகள் வழியாக இந்த தேர்வு நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட சமையல் போட்டிகள்சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் கடந்த 2ஆம் தேதி காலை 8.00 முதலே நடைபெற்றது. பங்கேற்ற 45 போட்டியாளர்களில் 15 பேர் தேர்வு செய்யபட்டனர்.
இறுதி கட்ட தேர்வில் இந்த 15 பேரில் முதல், இரண்டாம், மூன்றாம பர்சுகளுடன் ஒரு சிறப்பு ஆறுதல் பரிசுக்கும் போட்டி நடைபெற்றது. பங்கேற்றவர்களுக்கும் வென்றவர்களுக்கும் பரிகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவிலேயே ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் வழங்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள் உட்பட அனைவரும் இரவு உணவும் வழங்கப்பட்டது. நிகழ்சினை ஒருங்கிணைத்த திரு. அசோக் ஜுஞுன்வாலா அவர்களின் உரை சிறப்பாக அமைந்தது. பங்கேற்ற அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் நிகழ்வாக அமைந்தது. மக்கள் நலச் சந்தை தொழில்முனைவோர்கள் மூவர் பங்கேற்றனர்,
திருமிகு ரேகாசிவக்குமார் சிறப்பு ஆறுதல் பரிசினை வென்றார் (மாநில அளவில் நான்காம் நிலை). திருமிகு கல்பனா, காஞ்சிபுரம், இறுதிச் சுற்றில் பங்கேற்றார். திருமிகு பங்கஜம் முதல் சுற்றில் தேர்வாகி நேரடித்தேர்வில் பங்கேறார். இந்த மூவருக்கும் ,அனைத்து பங்கேற்பாளர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் மக்கள் நலச் சந்தை வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து நாம் இணைந்து பயணிக்க மக்கள்நலச் சந்தை உங்களுக்கு உற்ற தோழனாக துணை நிற்கும்.இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்ய கடுமையாக் உழைத்த சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா இளைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த நிகழ்வின் செய்தியாக:இந்திய நாட்டின் மிகப்பெரிய ஆரோக்கியப் பிரச்சனை சத்தின்மை. குறிப்பாக குழந்தைகளிடம் உள்ள சத்தின்மை. சிறுதானியங்கள் உணவில் போதிய அளவு சேர்த்துக் கொள்வது இதற்கான பிரதான தீர்வாக அமையும். மக்களிடம் சிறுதானிய உணவு சாப்பிடுவது மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதன் விளைவாக சிறுதானியங்களுக்கு கேட்பு குறைந்து விட்டது. இதன் எதிரொலியாக நமது நாட்டில் சிறுதானிய உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபாடு இல்லை. 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளது. சிறுதானியத்தின் பயன்பாட்டிற்கு மிகப் பெரும் விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.
Must Read:கடுக்காய் நன்மைகள்; தலைவலி இதய நோயில் இருந்து விடுதலை பெறலாம்…
சிறுதானியங்கள் நல்ல சுவையாகச் சாப்பிடும் வகையில் பல வடிவங்களில் மதிப்புக்கூட்டப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. இதனை அறிவியல் & தொழிற்நுட்பம் இணைப்பில் மேலும் மேம்படுத்த வேண்டும். இந்த போட்டியும் இதனை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றது.
சிறுதானியத்தில் புதுமையான புதிய தொழில் துவங்க இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக்கின்றன. இதற்கு தேவையான உதவிகளை சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா செய்யத் தயாராக உள்ளது.
இவற்றுடன் நாம் செய்யவேண்டியது, விவசாயிகளை சிறுதானியங்கள் தங்கள் நிலத்தில் ஒரு பகுதியேனும் உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். இதனை முக்கியமாக இயற்கை வழியில் உற்பத்தி செய்ய வழிகாட்ட வேண்டும்.குறிப்பாக, உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கள் இதில் கவனம் செலுத்தச் செய்யலாம்.
உற்பத்தி செய்த சிறுதானியங்களையும் அதில் தயாரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் மக்களிடம் சேர்க்க தற்போது உருவாகி வரும் நேரிடை விற்பனைச் சந்தைகளை ஆதரிக்க வேண்டும். சிறுதானியங்களில் தொழில்முனைவோர்களாக நமது இளஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கான ஆதரவினை வங்கிகள் வழங்க வலியுறுத்த வேண்டும். அறிவுத்தோட்டமும் மக்கள்ந்லச்சந்தையும் இந்த உன்னதப்பணியில் அறிவுத்தோட்டம் உதவியாய் நிற்கும்.
-கு.செந்தமிழ் செல்வன், 9443032436
#Millets #InternationalMilletYear2023 #MilletsCooking #IITMResearchPark
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments