மெல்லக் கொல்லும் மென்பானங்களை தவிருங்கள்


மென்பானங்களை தவிருங்கள்

குளிர்பானங்களில் செயற்கை நிறமூட்டிகள்

குளிர்பானங்களில் செயற்கை இனிப்பூட்டிகள்

செயற்கை பொருட்களால் ஒவ்வாமை ஏற்படுகிறது

செயற்கை பொருட்கள் உடல் பாதிப்புகளையும் அதிகரிக்கும்

நமது பாரம்பர்யத்தில் இளநீர், நுங்கு போன்றவை இயற்கையிலேயே நமது தாகம் தணித்து வருகின்றன. காட்சி ஊடகங்களின் வாயிலாக விளம்பர தாக்கத்தின் வாயிலாக கலர், கலரான தோற்றத்தில் சந்தைக்கு வந்தவை மென்பானங்கள். மென்பானத்தில் உள்ள ஆபத்துகள் நமக்கு கேடாக வந்திருக்கிறது.

சென்னை பெசன்ட் நகரில் தாரணி என்ற சிறுமி குளிர்பானம் குடித்ததால் உடல் நீலநிறமாக மாறி உயிரிழந்துள்ளார். சிறுமியின் பெற்றோருக்கு மட்டுமின்றி இந்தசெய்தியை படிக்கும் எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குளிர்பானம் உண்மையில் கொல்லக் கூடியதா?

குளிர்பானங்கள் தயாரிக்கப்பட்ட தினத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு சென்று சில நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக  செயற்கை பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. 

இதையும் படியுங்கள் :நெல்லி, பீட்ரூட், கேரட், ஆரஞ்சு ஜூஸ், முருங்கை சூப்… கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் பானங்கள் தயாரிப்பது எப்படி?

குளிர்பானங்கள் காற்றடைத்த பாட்டிலில்தான் அடைக்கப்படுகின்றன. நாம் குளிர்பானத்தின் மூடியை திறக்கும்போது அவை பொங்கி வருவது இதன் காரணமாகத்தான்.

குளிர்பானங்கள் காற்றடைத்த பாட்டிலில்தான் அடைக்கப்படுகின்றன

இனிப்பின் சுவைக்காக சேர்க்கப்படுகிறது

குளிர்பானத்தில் பொதுவாக சோடியம் பென்சோயேட் அல்லது சல்பைட்டுகள் உள்ளன. இது எதற்காக என்றால், குளிர்பானங்களில் இனிப்பின் சுவைக்காக ஒரு மறை பொருளாக சல்ஃபைட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. சல்பைட்டுகள் அனைவருக்கும் தீங்கு விளைவிக்காது என்று சொல்கின்றனர்.

சாக்கரின் பாதிப்பை ஏற்படுத்தும்

யாருக்கெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று கேட்டால், ஆஸ்துமா போன்ற காது மூக்குத் தொண்டை பிரச்சனை உள்ளவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே ஆஸ்துமா நோயாளிகள் அல்லது பாதிப்பு உள்ளவர்கள் எந்த வகையான மென்பானங்களையும் குடிக்கக் கூடாது என்று கூறுகின்றனர்.

குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பு ஊட்டியான சாக்கரின் சிறுநீர் பையில் புற்றுநோய் ற்படுவதற்கான ஆபத்தைக் கொண்டதாகும். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மத்தியில் சாக்கரின் எதிர்விளைவுகளை ஏற்படுத்துவது உண்மை. சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது, தலைவலி உண்டாகும். சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் வயிற்றுபோக்கை ஏற்படுத்தக் கூடும். அது மட்டுமின்றி தோலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கை செய்கின்றனர்.

எங்கும் நிறைந்திருக்கும் கலப்படம்

சிறுவர், சிறுமியர் தமக்கு என்ன நோய் இருந்தாலும் குளிர் பானம் போன்றவற்றை ஆர்வத்துடன் குடிக்கத்தான் செய்கிறார்.சிலருக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும் என்று சொல்லப்படும் பானங்களை ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஆனால், உணவு அரசியலில் இதுபோன்ற கேள்விகள் விரும்பப்படுவதில்லை.

நாம் குடிக்கும் பால் முதல், சாப்பிடும் அரிசி வரை அனைத்திலும் கலப்படம் என்பது நீக்கமற நிறைந்திருக்கிறது. கலப்படம் செய்து விற்பனை செய்வதற்கென்றே ஒரு கும்பல் இருக்கத்தான் செய்கிறது. பேருந்து நிலையங்கள், நெடுஞ்சாலை கடைகள் ஆகியவற்றுக்கு விற்கப்படும் பொருட்களின் விலை அதிகம் என்பது மட்டுமின்றி கலப்படப் பொருட்களும் அதிகம் நிறைந்துள்ளது.

குளிர்பானங்களை தவிருங்கள்

மக்களை நுகர்வோராக கருதும் இந்த சமூகம் நுகர்வோருக்கு தரமான பொருட்களை எப்போதுமே கொடுக்கவில்லை. வணிக நோக்கில் லாபம் ஈட்டுவதற்கு கோடிகோடியாக வர்த்தகம் ஈட்டுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

குளிர்பானங்களை குடிக்காமல் தவிர்க்க வேண்டும்

எனவே குளிர்பானங்களை குடிக்காமல் தவிர்ப்பதுதான் நமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி. பயணத்தின்போது சுத்தமான பாட்டிலில் நம் வீட்டில் இருந்தே குடிநீர் எடுத்துச் செல்லுதல் நலம். வீட்டில் குழந்தைகள் தாகம் தீர்ப்பதற்கு எலுமிச்சை பழரசம் போன்றவற்றை தயாரித்து கொடுக்கலாம். நன்னாரி சர்பத் என்ற தரமான குளிர் பானங்கள் வாங்கிக் கொடுக்கலாம். உள்ளூர்தயாரிப்பாக இருந்தாலும், வெளியூர் தயாரிப்பாக இருந்தாலும் சாப்ட் டிரிங்க்ஸ் என்ற மென்பானங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

இயற்கை பானங்கள்

நன்னாரி வேர், நன்னாரி பொடி இரண்டுமே நமது தெருவில் இருக்கும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நன்னாரி வேரை வாங்கி அதன் வாயிலாக சர்பத் தயாரிப்பதற்கு நேரம் இல்லாதவர்கள் நன்னாரி பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள் :கோடை குளிர்ச்சிக்கு நம் நலம் நாடி நிற்கும் நன்னாரி

நன்னாரி பொடியை முந்திய இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் வெல்லம் சேர்க்க வேண்டும். நன்னாரி பொடி ஊற வைக்கப்பட்ட தண்ணீர், வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதில் எலுமிச்சை சாறை பிழிந்து விடவும். பின்னர் இதை ஆற வைத்து, பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த நன்னாரி கரைசலில் இருந்து தினந்தோறும் கொஞ்சம் எடுத்து டம்பளிரில் போட்டு, தண்ணீர் சேர்த்து தினந்தோறும் குடிக்கலாம். நன்னாரி வேரில் இயற்கையிலேயே வெப்பத்தை குறைக்கும் சக்தி உள்ளது. நன்னாரி கலந்த குடிநீர் குடிப்பதன் வாயிலாக வாய்ப்புண் சரியாகும்.

கோடைகாலங்களில் நம் பாரம்பரிய சிறுதானிய உணவுகளால் கூழ் செய்து அருந்தலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கேழ்வரகு, கம்பு கூழ் உடலுக்கு நல்லது. குளிர்ச்சி தரும். ஆரோக்கியமானதும் கூட. அதிக செலவு வேண்டாம் என்று நினைப்பவர்கள், நீர்மோர், மண்பானை தண்ணீர் குடிக்கலாம்.

 -பா.கனீஸ்வரி

#SoftDrinks  #CoolDrinks  #Colo  #BottledDrinks #GirlDeadSoftDrink #AvoidSoftDrinks #NanariDrinks

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

Comments


View More

Leave a Comments