சென்னையில் அக்டோபர் 2ம் தேதி வள்ளுவம் இயற்கை சந்தை கூடல்


இயற்கை விவசாய பொருட்களின் சந்தையுடன் , கைத்தறி நெசவு, இயற்கை உணவு , இயற்கை விவசாயம் , இயற்கை மருத்துவம், சுற்றுச்சூழல் குறித்த ஆழமான கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல்கள்‌ மற்றும் கொண்டாட்டமான பாரம்பரிய விளையாட்டுகள் நிகழ உள்ளன. தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியன்று  "மகாத்மா" எனும் தலைப்பில் குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டியில் தங்களது குழந்தைகளையும் பங்கேற்றிட அழைத்து வாருங்கள் . 

Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை

இந்த நிகழ்வில் காந்தியின் இராட்டைஎனும்  தலைப்பில்  மதிப்புமிகு நெசவாளர் சிவகுருநாதன் (  "நூற்பு"  - கைத்தறி நெசவுக்கான கூட்டுறவு ) உரையாற்றுகிறார். மதியம் உணவும் பின்னராக அனைவருக்குமான பாரம்பரிய விளையாட்டு கொண்டாட்டங்கள் நிகழும்.  இயற்கையில் விளைந்த தரமான அனைத்து உணவு சமையல் பொருட்களும் கிடைக்கும். பாரம்பரிய அரிசி வகைகள், பருப்பு வகைகள் , சீர்தானியங்கள் , தூய செக்கு எண்ணெய்கள் , மசால் வகைகள் , மாவு - பொடி வகைகள் , மலைத்தேன்,     மரபு திண்பண்டங்கள் , மரபு விளையாட்டு பொருட்கள் , மண்பாண்ட பொருட்கள்,  நாட்டு விதைகள் ,இயற்கையில் மதிப்புக்கூட்டு பண்டங்கள்  அனைத்தும்‌ கிடைக்கும் .( அனுமதி இலவசம் )

குமார ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி , 3வது கிராஸ் , காந்திநகர் , அடையார் , சென்னை . என்ற முகவரியில் காலை 9 முதல் மாலை 7 வரை‌ நடைபெற உள்ளது. . மேலும் விவரங்களுக்கு  வெற்றிமாறன்.இரா  அவர்களை 9566667708 / 7448558447 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.  .

#Nammalvar_people_forum  #adayar  #organicfarming  #organic  #organicmarketing

 


Comments


View More

Leave a Comments