பசி உணர்வை கட்டுப்படுத்த உலர் பிளம்ஸ் சாப்பிடுவது நல்லது
உடல் எடையை ஆரோக்கியமாக நிர்வகிக்க ஆரோக்கியமான உணவுகளை உண்பதும், சீரான உடற்பயிற்சி செய்வதும் அவசியம். உடல் எடையை பராமரிக்க நினைக்கும் அதே வேளையில் காலை உணவுக்குபின்னரோ அல்லது மதிய உணவுக்குப் பிறகு திடீரென பசிக்கும்போது என்ன சாப்பிடுவது என்று நம்மில் பலருக்கு குழப்பம் ஏற்படும். கண்ட உணவையும் சாப்பிட்டு, நமது உடல் எடை மீண்டும் கூடி விடக் கூடும்.
Must Read: கொரோனாவில் இருந்து விடுபட மூலிகை கசாயங்கள்
திடீர் பசி காரணமாக சில நேரங்களில்,ஆரோக்கியமான உணவு உண்ணும் இலக்கில் இருந்து நாம் தடம் புரள நேரிடும். பசியின் வாயிலாக நமது உடல் நமக்கு சிலவற்றை உணர்த்துகிறது. தீவிரமான இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற பசி எழும்போது அந்த உணர்வை எப்படி எதிர்கொள்வது?
நீங்கள் நாள் முழுவதும் போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் சாப்பிட்ட உடன் திருப்தியுடன் உணருவீர்கள். எனினும் இனிப்பு சாப்பிட வேண்டும் போன்ற பசி ஏற்படும்போது, அதை எதிர்கொள்ள என்ன சாப்பிடுவது என்பதைப் பார்க்கலாம். இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற பசி உணர்வு எழும்போது, சிற்றுண்டியாக கொடிமுந்திரி அதாவது உலர்ந்த பிளம்ஸ் சாப்பிடலாம். கொடிமுந்திரி உங்களின் அதீத பசியை குறைக்க உதவும்.
கொடிமுந்திரி உங்கள் வயிற்றை நிரப்புகிறது பசி வேதனையைத் தணிக்கும்: "ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் புல்லட்டின் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, திராட்சை அல்லது ஜெல்லி பீன்ஸ் சாப்பிடுபவர்களை விட கொடிமுந்திரிகளை சாப்பிட்டவர்கள் பசி குறைவாக இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. கொடி முந்திரி குறைவான கலோரிகளை கொண்டுள்ளது.
இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற பசிக்கு கொடிமுந்திரி சிறந்த உணவாக இருக்கிறது. சர்க்கரை சேர்க்காமல் இயற்கையான இனிப்பை இது வழங்குகிறது. முந்திரி பழங்கள் இயற்கையாகவே இனிப்பானவை, இனிப்புப் பற்களை திருப்திப்படுத்த உதவும் ஒரு காரணியாகும்,
Must Read:வாய் நாற்றம் தீர கிராம்பு உடல் எரிச்சல் தீர கீழா நெல்லி
மேலும், மிட்டாய்களைப் போலல்லாமல், இயற்கையான ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன, மேலும் நார்ச்சத்துகளை கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கொடி முந்திரியிலும் 3.5 கிராம் இயற்கையான சர்க்கரை மற்றும் 0.5 கிராம் நார்ச்சத்து உள்ளது.நீங்கள் பசியைக் கட்டுப்படுத்தும் செயல்பாட்டில் இருந்தால், உங்களுடன் ஒரு பையில் கொடிமுந்திரியை எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள்.
-ஆகேறன்
#Prunes #HealthyPrunes #DriedPlums #BestSnacks
Comments