வாய் நாற்றம் தீர கிராம்பு உடல் எரிச்சல் தீர கீழா நெல்லி


நமது அருகாமையில் வளரும் மூலிகைகளைக் கொண்டு நமது உடல் நலனை பேணி பாதுகாக்க முடியும்.  அந்த வகையில் மூலிகைகளின் நன்மைகள் குறித்தும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆதனூரை சேர்ந்த திரு.ASNசாமி அவர்கள் தொடர்ந்து நமக்கு வழங்கி வருகிறார். இன்று கிராம்பு மற்றும் கீழாநெல்லி  ஆகியவற்றில் உள்ள நன்மைகள் குறித்து அவர் கூறும் தகவல்களைப் பார்க்கலாம்.

கிராம்பு 

இது ஒரு மருத்துவ பொருளாகும் சமையலில் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது மருத்துவ குணம் ஈசி அகற்றுதல் வயிற்று வாய்வு அகற்றுதல் செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது 

Must Read: தேன் நெல்லி சாப்பிடலாமா மருத்துவர் விக்ரம் குமார் சொல்லும் விளக்கம்…

கிராம்பு பொடியை அரைகிராம் தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட உறுப்புகள் அனைத்தும் பலப்படும் 2 கிராம் கிராம்பு பொடியை சம பனைவெல்லம் கலந்து மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்களும் காலை மாலை கொடுத்துவர உதிர சிக்கலும் அதனால் ஏற்படும் அடிவயிற்று வலியும் தீரும் கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர வாய் நாற்றம் ஈறு வீக்கம் பல்வலி ஆகியவை குணமாகும் 

கீழாநெல்லி 

மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்தசிறு இலைகளை உடைய குறுஞ்செடி இலைக் கொத்தின் அடிப்புறத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும் அரை மீட்டர் உயரத்துக்கு குறைவாக வளரும் கீழ்காய் நெல்லி கீழ்வாய் நெல்லி ஆகியவை இதன் பெயர்கள்.

கீழா நெல்லி சாப்பிடுவது பல உடல் நலன்களை தரும்தானாக வளரக்கூடியது செடி முழுவதும் மருத்துவப் பயனுடையது சிறுநீர்ப் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் வீக்கம் கட்டி ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் பயன்படுகிறது.

Must Read: பித்த குமட்டல் தீர்க்கும் களா செடி

சமூலம்(அடி வேருடன் கூடிய கீழாநெல்லியின் முழு செடி ) 300 கிராம் 4 மிளகுடன் சிதைத்து 2 குவளை நீரில் போட்டு ஒரு குவளையாக காய்ச்சி மூன்று வேலையாக குடித்துவர சூடு ஜுரம் தேக எரிச்சல் தீரும் இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவி குளிக்க சொறி சிரங்கு நமச்சல் தீரும்.

இலை மூக்கிரட்டை இலை பொன்னாங்கண்ணி இலை சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண் பார்வை மங்கல் வெள்ளெழுத்து தீரும் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுக பார்வை கோளாறு நீங்கும் கீழாநெல்லி வேர் அசோகப்பட்டை அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து சாப்பிடவும். கீழாநெல்லி வேர் அசோகப்பட்டை அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் உட்கொள்ள 40 நாட்கள் பெரும்பாடு வெள்ளை மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும் .

Must Read: கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம் இஞ்சி மிட்டாய்…

நன்றிASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர் திருவண்ணாமலை மாவட்டம் 9442311505

#CloveBenefits #KeelaNelliBenefits #PattiVaithiyam #Stonebreaker #GaleOfTheWind

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Comments


View More

Leave a Comments