தேன் நெல்லி சாப்பிடலாமா மருத்துவர் விக்ரம் குமார் சொல்லும் விளக்கம்…


நெல்லிக்காய்களை தேனில் கலந்து சாப்பிட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்று வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரப்பப்படுகின்றன. இது குறித்து அண்மையில் சித்த மருத்துவர் விக்ரம் குமார் அளித்த விளக்கம் ஒன்றை பார்க்கலாம். 

“தேன் நெல்லி சாப்பிடுவது மிகவும் நல்லது. தேன் தரமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். கலப்பட தேன் ஆக இருந்தால் நன்றாக இருக்காது. அப்படி இருந்தால் உரிய பலன் கிடைக்காது.சுத்தமான தரமான தேனை வாங்கி கொள்ளுங்கள். 

சித்தமருத்துவர் விக்ரம் குமார்

நெல்லிக்காயில் சிறிய ஓட்டைகளைப் போட்டு, ஒரு பாட்டிலில் நெல்லிக்காய்களைப் போட்டு அதில் தேனை ஊற்றி ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் சாப்பிட்டால் நல்லது. ஆனால், தேன் தரமானதாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். தாராளமாக தேனில் நெல்லியை ஊற வைத்து சாப்பிடுவதால் பலன் கிடைக்கும். 

Must Read: பரோட்டாவின் சுவையை உணரும் நாம் மைதாவின் தீமைகளையும் தெரிந்து கொள்வோம்

இப்படி தேனில் ஊறிய நெல்லிக்காய்களை சிறியவர்கள் விரும்புவர்கள். எல்லோரும் விரும்புவர். தேனில் உள்ள புளிப்பு, இனிப்பு சுவை, நெல்லிக்காயில் உள்ள துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு சுவையும் நமக்கு கிடைக்கும். காயகல்ப மருந்தாகவும் தேன் நெல்லி பார்க்கப்படுகிறது,” என்று சித்தமருத்துவர் விக்ரம் குமார் விளக்கம் அளித்துள்ளார்.  

எப்படி தயாரிப்பது?

நெல்லிக்காய்களில் சிறியதுளைகள் போட்டு அதனை ஒரு பாட்டிலில் போட்டு, அதன் பின்னர் தேனை ஊற்றி ஊற வைத்து சாப்பிடலாம். இரண்டாவதாக நெல்லிக்காயை வெட்டி கொட்டைகளை நீக்கி விட்டு, நெல்லிக்காய்களை மட்டும் பாட்டிலில் போட்டு பின்னர் தேன் ஊற்றி ஊற வைக்க வேண்டும். 

நெல்லிக்காய்களை தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்

 

இது தவிர நெல்லிக்காய்களை இட்லி பானையில் வைத்து வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடங்களில் நெல்லிக்காய் வெந்து விடும். அந்த நெல்லிக்காய்களை பாட்டிலில் போட்டு தேன் ஊற்றி ஊற வைக்க வேண்டும். இப்படி மூன்று முறைகளில் ஏதாவது ஒரு முறையில் தேன் நெல்லி தயாரித்து சாப்பிடலாம். 

 Must Read: நெல்லிக்காயில் விதம் விதமான உணவுப்பொருட்கள் செய்யலாம்

தேன் நெல்லியின் பலன்கள் 

தேன் நெல்லியை தினமும் ஒன்று என சாப்பிடுவதன் வாயிலாக நமது உடலில் உள்ள கெட்ட ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. ரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதுடன், நமக்கு இருக்கும் ரத்த சோகை நீங்கும். நமக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. கண் நோய்கள் உள்ளோர் தினமும் தேன் நெல்லிக்காய் சாப்பிடலாம். கண் எரிச்சல் குணமாகும். கண்கள் நீர் வடிவதும் குணமாகும். எப்போதும் சிவப்பாக இருக்கும் கண்கள் குளிர்ச்சியாக மாறும். 

-ஆகேறன் 

#AmlaWithHoney  #AmlaHealthBenefits  #HoneyWithAmlaBenefits #PattiVaithiyam #DRVikramKumar #HoneyWithGooseberry


Comments


View More

Leave a Comments