5PointsForHealthy மலச்சிக்கலைப் போக்கும் கசகசா


1.இறைச்சி உணவுகளில் சேர்க்கப்படும் மசாலாப்பொருள்களில் மட்டுமே கசகசா சேர்க்கப்படுகிறது.

 

2 கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. இவை செரிமானத்துக்கு உதவுவதுடன் மலச்சிக்கலைப் போக்கும். கூடவே அமிலத்தன்மை உண்டாவது, நெஞ்செரிச்சல், வாய்வு உற்பத்தி போன்றவற்றிலிருந்து நிவாரணமளிக்கிறது. 

 

3. கசகசாவில் உள்ள சத்துகள் மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவுவதுடன் அறிவுத்திறனை அதிகரிக்க உதவுகிறது. 

    Must Read: தக்காளிக்கு பதில் தக்காளி பொடி மாற்றி யோசித்தால் லாபம் கிடைக்கும்……

4. அனைத்துக்கும் மேலாக புற்றுநோய்க்கு கசகசா நல்ல பலனளிக்கிறது. ஓபியம் கசகசா விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நாஸ்காபைன் என்னும் மருந்து மூளைக்கட்டிகள், மார்பகப் புற்று மற்றும் புராஸ்டேட் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது.

 

5.  ஆண்மைக்கோளாறு உள்ளவர்கள் சிட்டுக்குருவி லேகியத்துக்குப் பதில் கசகசாவுடன் வால்மிளகு, பாதாம்பருப்பு சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் போதும். விந்தணுக்கள் பெருகி குழந்தைப்பேறு கிடைக்கும். ஒரு ஸ்பூன் கசகசாவுடன் 3 வால்மிளகு, 2 பாதாம்பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து பனங்கல்கண்டு சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் போதும்.

 

எம்.மரியபெல்சின்

#KasakasaForHeathy   #BenefitsForKasakasa  #Kasakasa

(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)


Comments


View More

Leave a Comments