வேளாண்மைக்கு கடன் தேவையில்லை, வருமானம் பெருகும் கொள்கைகள் வேண்டும்


வேளாண்மையின் நெருக்கடி நிலைமை, உழவர்களின் தொடர் போராட்டங்கள் ஆகிய சூழலால் பொதுத் தேர்தலுக்கு முந்தைய முழு நிதிநிலை (நிநி) அறிக்கையில் வேளாண்மைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று அனைத்து எதிர்பார்ப்புகளும் இருந்த நிலையில், பல்வேறு திட்டங்களுக்கான செலவுகள் உண்மையில் குறைக்கப்பட்டுள்ளன. 

வேளாண்மைத் துறை அதிக முன்னுரிமைப் பட்டியலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 2023-24 இந்திய நிதிநிலை அறிக்கையில் முன்னுரிமையில் இருந்து வேளாண்மை புறக்கணிக்கப்பட்டுள்ளது, வழமையான  அரசின் முதன்மைத் திட்டங்கள் கூட மந்தமான ஒதுக்கீட்டைப் பெறுகின்றன.

Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை

ஏற்கனவே 2022-23 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 4.7 விழுக்காடு குறைவாகவே செலவிடப்பட்டுள்ளது. அதாவது 11553179 கோடியில் இருந்து 11,02,54.53 கோடியாக செலவு செய்யப்பட்டது. மேலும் சென்ற ஆண்டில் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் அதாவது ஆராய்ச்சி மற்றும் வேளாண் விரிவாக்கம் எல்லாம் சேர்த்து 7 விழுக்காடு ஒதுக்கீட்டில் குறைவாகவே செலவிடப்ட்டது.

2023-24 நிதி நிலை அறிக்கை மீது கருத்து2023-24 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் வேளாண்மைக்கான ஒதுக்கீடு வெகுவாகக் குறைந்துள்ளது. இத்துறைக்கு கடந்த ஆண்டு மொத்த ஒதுக்கீட்டில் 3.36 விழுக்காடு கிடைத்த நிலையில், இம்முறை அது மொத்த நிதிநிலை அறிக்கையில் 2.7 விழுக்காடு மட்டுமே.

வேளாண்மை சார்பான துறைகளுக்குக் கூட ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாத்மாகாந்திய தேசிய ஊரக வேலைவாப்புத் திட்டம் 18 விழுக்காடும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு (RKVY) 31 விழுக்காடும், பயிர் காப்பீட்டுத் திட்டமான பிரதமர் பசல் பீமா திட்டத்திற்கு 12 விழுக்காடும் நிதி குறைந்துள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஒதுக்கீடான ஆண்டுக்கு ரூ. 6,000  தொடர்ந்து தரப்படவுள்ளது.இந்தியாவில் வேளாண்மையின் வருமானம் மாதத்திற்கு ரூ. 10218 என்று சூழல் மதிப்பீட்டு ஆய்வரிக்கை தெரிவிக்கிறது. அதே சமயம் ஓர் உழவரின் தனியாள் வருமானம் ரூ. 27 மட்டுமே. ஆகவே வேளாண்மை வாழ்க்கை என்பது எவ்வளவு நெருக்கடியில் உள்ளது என்பதை அறிய வேண்டும்.

நமது அரசின் கொள்கை வகுப்பாளர்களுக்கு வேளாண்மைக்கும், வேளாண் வணிகத்திற்கும் வேறுபாடு தெரியவில்லை. வேளாண் வணிகத்திற்கே அள்ளித் தருகிறார்கள். உழவர்களுக்கும், வேளாண்மைக்கும் ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருகிறது."எங்களுக்கு கடன் தேவையில்லை, வருமானம் பெருகும் கொள்கைகள் வேண்டும்."

-பாமயன்


Comments


View More

Leave a Comments