10 ஆப்பிளை விட 1 விளாம் பழம் சாப்பிடுவதே சிறந்தது…


நடைமுறையில் எங்க விலையதுனு கூட தெரியாத எது பிறப்பிடம்னு கூட தெரியவில்லை ஆப்பிளுக்கு மரியாதை கொண்டுகின்ற நமக்கு  .. நம்ம ஊரில் விலையும், நமக்கு இருக்கின்ற,  நம்கண்கள் முன்பே அறுவடை செய்ய முடிந்த விளாம் பழம் (woody apple) பற்றி தான் பார்க்க போகிறோம் 

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட  மரம். இது லிமோனியா அசிடிசிமா என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. தெலுங்கில் "வெல்லகா பாண்டு", கன்னடத்தில் "பெலடா ஹன்னு", தமிழில் "வேலம் பழம்" அல்லது "விழாம் பழம்" என்று அழைக்கப்படுகிறது. மர ஆப்பிள் என்று சொல்லப்படும் இது தாய்லாந்து, மலேசியா, கம்போடியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் வளர்கிறது.

இது ஏன் நல்லது  

விளாம்பழத்தை. பெரும்பாலும் அடிக்கடி மக்கள் சாப்பிடுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இந்தப் பழம் எல்லா காலங்களிலும் கிடைக்காது. மற்றொன்று விளாம்பழத்தின் சக்தி பற்றிய மக்களின் அறியாமை.

Must Read: ஃபுட் கிரேவிங் உணர்வை எதிர்கொள்வது எப்படி?

விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் சத்து அதிகமாக எலும்பு மற்றும் பற்களை வலுடையச் செய்கிறது. சிறிது சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் கலந்து சாப்பிட்டால் உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

விளாம்பழம் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. விளாம்பழத்தில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. 

விளாம்பழம் ஏன் சிறந்தது தெரியுமா?

ஓடுபோல இருக்கும் விளாம்பழத்தின் தோல் பகுதியை உடைத்து, உள்ளிருக்கும் சதைப் பகுதியை சாப்பிட வேண்டும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இருப்பவர்கள் விளாம்பழத்துடன் வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

விளாம்பழத்தை உண்பதன் மூலம் ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை எதிர்த்துப் போராடமுடியும். மேலும் அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. 

தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். விளாம் மரத்தின் இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விளாம் மரத்தின் பிசினை அடிக்கடி சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற  பிரச்சினைகள் தீரும்.

இதன் காய், பழம், மரப்பட்டை, இலை ஆகியவற்றை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். வெல்லத்துடன் பிசைந்து உண்ணலாம். இந்தப் பழங்களானது ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம்வரை கிடைக்கும். இந்த பழம் தயிருடன் சேர்த்து பச்சடிபோல் சாப்பிடலாம். 

எப்படி சாப்பிடுவது?

விளாம் பழத்தை துவையல் செய்தும் சாப்பிடலாம். கடாயில் நெய் அல்லது, நல்லெண்ணெய் விட்டு வரமிளகாய், விளாம் பழத்தில் சதை, நாட்டு சக்கரை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதங்கியதும் அதனை துவையல் பதத்திற்கு அரைக்க வேண்டும். இனிப்பு, புளிப்பு, காரம் என பல சுவைகள் கலந்த இந்த துவையல் தேசை, இட்லி, சுடு சாதத்துடன் சாப்பிடலாம். இது போல் துவையல் செய்து சாப்பிட்டால் வயிறு உப்பசம் ஆகாமல் இருக்கும்.

சிறுது பழத்துடன், நாட்டு சக்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு வடிகட்டி தேநீராக குடிக்கலாம். அப்படி குடித்து வந்தால் உடல் சோர்வு, பித்த வாந்தி, மயக்கம் ஆகியவை குணமாகும் என கூறுகின்றனர்.நல்லதை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து பழகுவோம். 10 ஆப்பிளை விட 1 விளாம் பழம் சாப்பிடுவதே சிறந்தது.

-இயற்கை விவசாயி செய்யூர் பாலாஜி

#woodyapplebenefits #woodyapple #howtoeatwoodyapple #vilampazham

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments