#FoodCraving ஃபுட் கிரேவிங் உணர்வை எதிர்கொள்வது எப்படி?


நல்லதொரு காலை உணவு அல்லது மதிய உணவு சாப்பிட்ட ஒருமணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் ஒருவருக்கு பசி வருவதை உண்மையிலேயே பசி என்று கருத முடியாது. அதற்கு ஆங்கிலத்தில் ஃபுட்கிரேவிங் என்று பெயர். 

அதாவது கர்ப்பிணியாக இருப்பவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள் அது போன்று சாதாரண நபர்களுக்கு வருவதைத்தான் ஃபுட்கிரேவிங் என்று சொல்கின்றனர். இது குறிப்பிட்ட உணவை சாப்பிட வேண்டும் என்ற ஒரு ஆசை அல்லது விருப்பத்தில் வரும் பசி என்று உணவு ஊட்டசத்து வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

Must Read: தேங்காய்சாதத்துக்கு ஏற்ற சைட் டிஷ் என்ன தெரியுமா?

குறிப்பிட்ட உணவின் ருசி காரணமாகவும் இது போன்று ஃபுட் கிரேவிங் ஏற்படுகின்றது. எனவே உண்மையில் ஏற்படும் பசியையும், ஃபுட் கிரேவிங் என்ற உணர்வையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

ஃபுட் கிரேவிங் நேரிட்டால் அதனை தவிர்ப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

குறிப்பிட்ட உணவின் மீது அதீத விருப்பம் எழும்பும்போது அதிக தண்ணீர் குடியுங்கள். அதன் பின்னர் சில நிமிடங்கள் காத்திருங்ங்கள். இதன் பின்னர் இந்த ஃபுட் கிரேவிங் உங்களுக்கு ஏற்படாது.

அதிக புரோட்டின் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். இதன் மூலம் ஃபுட் கிரேவிங்கை தடுக்கலாம். புரோட்டின் கொண்ட உணவுகள் உட்கொள்வதால் நீண்ட நேரத்துக்கு உங்கள் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும்.

உணவு நேரத்தை திட்டமிடுங்கள்

காலை, மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றை குறிப்பட்ட நேர இடைவெளியில் போதுமான சத்துக்களை கொண்ட உணவாக உண்ணுங்கள். எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று நேரம், காலமே தெரியாமல் பணியாற்றும்போது இது போன்ற ஃபுட் கிரேவிங் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது.

மன அழுத்தம் கொள்ளாதீர்

சில நேரங்களில் நமக்கு ஏற்படும் மன அழுத்தமே ஃபுட்கிரேவிங்கை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்துக்கு உள்ளாகும்போது கார்டிசால் எனப்படும் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து, உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. 

ஃபுட் கார்விங்

குறிப்பாக தொப்பை பகுதியில் அதிக கொழுப்பை சேர்த்து உடல் எடையை அதிகரிக்கும். எனவே, மன அழுத்தமாக இருக்கும்போது அதிக உணவு உட்கொள்ளும் உணர்வை தவிருங்கள்.

தூக்கம் அவசியம்

போதுமான அளவு தூக்கம் இல்லாத து உங்கள் உடலில் ஹார்மோன் சமநிலையை குலைத்துவிடும். இதனால் சோர்வு ஏற்படும், உணவு உண்டால் சோர்வு தீரும் என்ற தவறான எண்ணம் ஃபுட் கிரேவிங் பழக்கத்துக்கு வழிவகுக்கும். எனவே சீரான தூக்கம் அவசியம்.

மனதை திசை திருப்புங்கள்

உங்களுக்கு பிடித்தமான உணவை சாப்பிட வேண்டும் என்ற ஃபுட்கிரேவிங் நினைப்பு தோன்றும் போது முடிந்த வரை அதில் இருந்து உங்கள் மனதை திசை திருப்ப முயற்சி செய்யவும். குறிப்பாக இத்தகைய எண்ணம் தோன்றும்போது குறுகிய தூரம் நடைபயிற்சி செய்யுங்கள். அப்படி வாய்ப்பில்லை எனில் பிடித்த இசையை கேட்கலாம். புத்தகம் படிக்கலாம்.

Must Read: “அதிக கவிச்சி வாடையில்லாமல் அளவான புளிப்பு, காரத்துடன் மீன் குழம்பு…”

உண்ணும்போது கவனம் தேவை

என்ன சாப்பிட்டோம் என்ற கவனம் இல்லாமல் அவசர கதியில் சாப்பிட்டும், சாப்பிடாலாமலும் சாப்பாட்டை விரைவாக விழுங்கிச் செல்வது சாப்பிட்ட உணர்வை தராது. இது உங்களிடம் ஃபுட்கிரேவிங் உணர்வை ஏற்படுத்தும்.

எனவே, உணவு உண்ணும்போது அதில் முழு கவனமும் செலுத்தி உண்ண வேண்டும். அவசரமாக உண்ணக்கூடாது. மாடு அசைபோடுவது போல உணவை மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். நீங்கள் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்ற சுயநினைவுடன் உங்கள் உணவை நீங்கள் உண்ண வேண்டும்.

-ரமணி 

#FoodCraving #WhatisFoodCraving #Foodaffection 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments