சென்னையில் நாளை மண்வாசனை கிராமிய திருவிழா…


தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.

Must Read: நீரிழிவு நோயாளிகள் எப்படி நோன்பும்விரதமும் இருக்க வேண்டும் தெரியுமா?

இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

மண்வாசனை கிராமிய திருவிழா…

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் மண்வாசனை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த கிராமிய திருவிழாவில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசிகள் ,சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படும் . சென்னையில் நாளை  24ம் தேதி  காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை தக்கர்பாபா வித்யாலயா (நந்தனம் சிக்னல் அருகில்),58,வெங்கட்நாராயணா சாலை,தி.நகர்,சென்னை - 600 017 என்ற முகவரியில் கிராமிய திருவிழா நடைபெற உள்ளது. 

சென்னையில் கிராமிய திருவிழா

 

கிராமிய திருவிழாவில் மதிப்புக்கூட்டிய உணவுப்பொருள்களும் கிடைக்கும் இந்த விழாவில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதும் ,சத்து மிகுந்த சிறு தானிய உணவு வகைகளை இன்றைய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெரும்.

Must Read: புற்றுநோய் செல்களை அழிக்க வேப்பம் பூ சாப்பிடலாம்…

இவைதவிர  1250க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்,200க்கும் மேற்பட்ட மரபு காய்கறி மற்றும் 100க்கும் மேற்பட்ட மூலிகை கண்காட்சிகள் இடம்பெறுகின்றன. மேலும், கருத்தரங்கம்,குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள்,ஒயிலாட்டம்,பறையிசை உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.. பாரம்பரியம்,கிராமியம் சார்ந்த இன்னும் பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அனுமதி இலவசம். மேலும் தகவலுக்கு 98841 66772 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

#AgriEvents #OrganicTraining #NaturalLife #FoodFestivals #AgriEventsAtChennai


Comments


View More

Leave a Comments