நவராத்திரி விரதத்துக்கு ஏற்ற 5 சிறுதானிய உணவுகள்…


இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், துர்கா தேவியின் அவதாரங்களை பக்தர்கள் விரதமிருந்து வழிபடுகின்றனர். 

நவராத்திரியின்போது பக்தர்கள்  இறைச்சி, மது போன்ற உணவுகளைத் தவிர்த்து சைவ உணவுகளை உண்கின்றனர்.  காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் மற்றும் உலர் பழங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நவராத்திரி உணவுகளை தயாரிக்கின்றனர். 

சாமை கட்லெட்

தினையில் செய்யப்பட்ட உணவுகள் நவராத்திரி நோன்பு நாட்களில் பயன்படுத்தப்படுகிறது. பிரஷர் குக்கரில் சீரகம், பச்சை மிளகாய், கழுவிய திணை அல்லது சாமை, தண்ணீர் சேர்த்து கட்லெட் தயாரிக்கப்படுகிறது. 

Must Read: சென்னையில் நம்மாழ்வார் மக்கள் குழு நடத்தும் மரபு திண்பண்டம் தயாரிப்பு பயிற்சி

ஒரு விசில் வந்ததும் குக்கரை இறக்கி திணை அரிசியுடன் உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், வறுத்த வேர்க்கடலை மற்றும் கொத்தமல்லியை கலக்கவும்.பின்னர் சிறிது நேரம் ஆற வைத்து, இறுதியாக மிருதுவாகவும் பொன்னிறமாகவும் மாறும் வரை வறுக்கவும். 

தினை ஊத்தப்பம்

அடுத்து, தினையுடன் ஊத்தப்பம் முயற்சி செய்யலாம், இந்த உணவை சிற்றுண்டியாக உட்கொள்ளலாம். நீங்கள் திணை அரிசி மாவில் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து சூடான கிரில்லில் சமைக்கலாம். நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி, உங்கள் விருப்பப்படி துவையலைத் தொட்டுக்கொண்டு உண்ணலாம். 

 

சாமை இட்லி

இந்த சுவையான சாமை இட்லி, சாமை அரிசி மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. 

நவராத்திரிக்கு ஏற்ற உணவுகள்

சாமை இட்லிக்கு கொத்தமல்லி சட்னியை சைட் டிஷ் ஆக பரிமாறினால் கூடுதலாக சில இட்லிகள் சாப்பிட முடியும். இரவு உணவு அல்லது காலை உணவாக சாப்பிடலாம் 

தோசை

வழக்கமான பூரி, சப்ஜியை விடுத்து நவராத்திரியில் புதிதாக சமைக்கலாம். உருளைக்கிழங்கு நிரப்பப்பட்ட சூடான மிருதுவான தோசை ருசியானதாக இருக்கும். பசியை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும். கொத்தமல்லி, தேங்காய் அல்லது வீட்டில் தக்காளி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

குதிரைவாலி 

நவராத்திரி விரத த்தின் போது குதிரைவாலி உணவை முயற்சிக்கலாம். வேகவைத்த குதிரைவாலியில் முழு சிவப்பு மிளகாய், சீரகம், நெய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து உண்ணவும். புதினா சட்னியுடன் சாப்பிட குதிரவாலி சுவையாக இருக்கும். 

-ரமணி 

#NavaratriViratham , #NavaratriFestival  ,#NavaratriFoods  ,  #NavaratriFasting


 


Comments


View More

Leave a Comments