ரயில் பயணத்தில் வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்..
ரயிலில் பயணம் செய்யும்போது உங்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்ய, ஜூப் எனும் செயலி உணவு டெலிவரி சேவையை வழங்குகிறது, இது வாட்ஸ் ஆப்-உடன் இணைக்கப்பட்டதாகும்.
சைவம், அசைவம் உணவு வகைகளை ஆர்டர் செய்யமுடியும் உங்களுடைய பயண சீட்டின் PNR எண்ணைக்கொண்டு உணவு ஆர்டர் செய்ய வேண்டும். உணவு விநியோக சேவை செயலியான ஜூப், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) உடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஐஆர்சிடிசியுடன் கூட்டு சேர்ந்து Zoop செயலி மற்றும் ஜியோ ஹாப்டிக் வாட்ஸ்அப் சாட்போட்டில் இந்த சேவை வழங்கப்படுகிறது. Whatsapp செயலி மூலம் PNR எண்களைப் பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்தால், பயணிகளின் இருக்கைகளுக்கு உணவு டெலிவரி செய்யப்படும்.
வாட்ஸ்அப் மூலம் இந்திய இரயில்வேயில் உணவை எப்படி ஆர்டர் செய்வது? என்பதை இப்போது பார்க்கலாம்.
1: ரயிலில் பயணிக்கும் நபர் '91-7042062070' என்ற எண்ணில் Whatsapp இல் Zoop உடன் சாட் செய்ய வேண்டும்.
2:வாட்ஸ்அப் சாட்டில் ‘ஹாய்’ என்று சொல்லவும்.
3: பின்னர் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க பட்டனுடன் ஒரு செய்தி தோன்றும்.
4: தங்களுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும்.
Must Read: திருப்பூரில் உணவகத்துக்கு புதிய நபர்கள் வேலைக்கு தேவை…
5: பின்னர் PNR எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். பின்னர் ரயில் நிலையத்தை தேர்வு செய்யவும் அல்லது ரயில் எண், இருக்கை எண் விவரங்களை வழங்கவும்.
இதன் பின்னர் உங்களுக்கு சூடான, சுவையான உணவு உங்கள் இருக்கைக்கு டெலிவரி செய்யப்படும்.
#FoodDeliveryAtTrain, FoodDeliveryThroughWhatsApp, FoodDeliveryWithPNRnumbar
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More