திருப்பூரில் உணவகத்துக்கு புதிய நபர்கள் வேலைக்கு தேவை…


சாமான்யர்கள் அனைவருக்கும்  தரமான உணவினை குறைவான பணத்திற்கு வழங்குவது மட்டுமே எங்களின் லட்சியம்.அதை நோக்கி மட்டுமே எங்களின் பயணம். உங்கள் Skandha உணவகம் தொடங்கி 7 மாதம் நிறைவடையும் தருணத்தில் அடுத்த கட்டத்திற்கு இந்த புனித சேவையை கொண்டு செல்ல உங்களின் உதவி தேவைபடுகிறது.

Must Read: பிரட் முதல் முட்டை வரை நாம் சாப்பிடுவதில் எது சிறந்தது?

திருப்பூர் மாநகரில் வெகு விரைவில் அடுத்தடுத்து கிளைகள் தொடங்க உள்ளோம். உங்களுக்கு நன்கு அறிமுகமான/ பொருளாதார ரீதியில் பின் தங்கிய/நல்ல பழக்க வழக்கங்கள் கொண்ட/வாய்ப்புகளை எதிர் நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் சாதிக்க காத்திருக்கும் தன்னம்பிக்கை நிறைந்த பெண்கள் எங்கள் ஸ்தாபனத்திற்கு தேவை படுகின்றனர். (வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு இருப்பிடம் இலவசம்). பெண்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கப்படும்.

புதிய உணவகத்துக்கு ஆட்கள் தேவை

தொடக்கத்தில் சம்பளம் 10,000 முதல் 12,000 வரை வழங்கப்படும். 6 மாதத்திற்கு மேல் சரியான பணியாளர்களை கண்டறிந்து முழு பணியாளர்களாக அங்கிகாரம் வழங்கி சம்பள உயர்வு அளிக்கப்படும். மற்றும் Catering கல்லுரியில் பயின்ற/கடைசி ஆண்டு தேர்வு எழுதிய  நிலையில் மாணவர்கள் (ஆண் மற்றும் பெண்) எங்கள் Skandha குழுமத்தில் இணைய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் தங்கள் முழு விவரங்களுடன் அதார் கார்டு, புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் வரவும்.  குறிப்பு : ஏற்கனவே மற்ற உணவகத்தில் பணிபுரியும் /பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த அன்பர்கள் தவிர்க்கவும்.இது அடுத்து தலைமுறைக்கான தேடல். தொடர்புக்கு; Skandha உணவகம், 107 Chellamma colony,5 th street, Samundipuram,Behind SAP Theatre,Near Vidya mandhir school,Tiruppur 641603, Mobile 8438714001

#RestarauntJobs,  #RestaranuntJobsThiruppur, #NewRestaranuntJobsForFreshers


Comments


View More

Leave a Comments