காஃபி தொழிலில் கலக்கும் நிறுவனங்கள்...


காஃபி என்ற சொல் பல கோடி பேருக்கு புத்துணர்ச்சியளிக்கும் சொல். அதே போல காஃபி வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கோடி கணக்கான ரூபாய்களை குவிக்கும் தொழிலும் கூட. ஹாட் காஃபி, கோல்டு காஃபி என விதம் விதமான காஃபிகள் உலகம் முழுவதும் பல சுவைகளில் கிடைக்கின்றன. காஃபி வணிகம் பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனைகளைக் கொண்டது. மக்களின் ருசியை மூலாதாரமாக கொண்டு இயங்குகிறது காஃபி தொழில். 

கஃபே காஃபி டே

காஃபி டே குளோபல் லிமிடெட் என்ற நிறுவனத்தின் சார்பில் கஃபே காஃபி டே பிராண்ட்  தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் அனைத்து நகரங்களிலும் வயது, வித்தியாசம் இன்றி காஃபி பிரியர்களின் பெரும் விருப்பமாக இருக்கும் பிராண்ட். இந்த நிறுவனம் முதன் முதலில் 1996ம் ஆண்டு பெங்களூரு பிரிகேட் சாலையில் தொடங்கப்பட்டது.

நெஸ்கஃபே

நெஸ்கஃபே சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம். இந்த நிறுவனம் 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய சந்தையிலும் நீண்ட நாட்களாக தம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. நெஸ்டில் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட பிராண்ட் என்பதால் நெஸ்கஃபே என்ற பெயர் இதனுடன் நிலைத்து விட்டது.

லாவாஸா

இத்தாலியின் டுரின் நகரில் லூய்கி லாவாஸா என்ற தயாரிப்பாளர் 1895ம் ஆண்டு இந்த லாவாஸா என்ற இந்த காஃபி பிராண்டை தயாரித்தார். சிறிய மளிகைக்கடையில் இது தொடங்கப்பட்டது. இப்போது லாவாஸா குடும்பத்தின் மூன்று மற்றும் நான்காவது தலைமுறையினர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்; புத்துணர்ச்சி தரும் தேநீர் அல்லது காஃபியை மிஸ் பண்ணும் மக்கள்..

ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேஷன் என்பது அமெரிக்க காஃபி நிறுவனமாகும் உலகம் முழுவதும் உள்ள சங்கிலித்தொடர் காஃபி ஹவுஸ் நிறுவனங்களில் மிகவும் புகழ்பெற்றது. வாஷிங்க்டன்னின் சியாட்டிலில் 1971ம் ஆண்டு இது தொடங்கப்பட்டது.இப்போது இந்த நிறுவனம் உலகின் 28,218 இடங்களில் இயங்கி வருகின்றது.

ப்ரூ

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காஃபி பிராண்ட் இதுதான். இந்த நிறுவனம் 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்தால் இந்த பிராண்ட் முன்னெடுக்கப்பட்டது. இந்திய பில்டர் காஃபி சந்தையில் பெரும் பங்கை ப்ரூ கையகப்படுத்தி உள்ளது.

டாடா காஃபி

டாடா குழுமத்தின் அங்கமான டாடா குளோபல் பீவரேஜஸ் நிறுவனத்தின் சார்பில் டாடா காஃபி பிராண்ட் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த காஃபி விவசாயத்தில் டாடா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இப்போது இந்த நிறுவனத்துக்கு தென் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 19 காஃபி எஸ்டேட்கள் உள்ளன.

-பா.கனீஸ்வரி

#coffe  #CoffeCompanies  #cafeCoffeDay

 


Comments


View More

Leave a Comments