தண்ணீர் பாட்டில் 20 ரூபாய், ஆனால், இன்பம் உணவகத்தில் வயிறாரா சாப்பிட 10ரூபாய்தான்…


ஒரு உணவகம் அல்லது டீ கடை  நடத்துபவர்  அதிகாலை  4.00 மணிக்கு  எழுந்தே ஆகவேண்டும். 4.30 க்கு  டீ  மற்றும்  முடக்காத்தான் சூப்  தயாரித்து வைக்கப்படும். 5.30  மணிக்கு  இனிப்பு அப்பம்  உளுந்தவடை தயாரிக்கப்படுகிறது. 

காலை 6.00 மணிக்கு  புளியோதரை,  6.30  மணிக்கு  இட்லி, பொங்கல்  மொச்சை . ஆகியவையும்,  7.00  மணிக்கு  பூரி,  லெமன் சாதம். தயிர்சாதம் ஆகியவையும் சமைக்கப்படும். சட்னி, சாம்பார், பூரி கிழங்கு ஆகியவையும் தயாரிக்கப்படும். 

Must Read: கல்யாண விருந்துபோல நூற்றுக்கணக்கானோர் சாப்பிடும் மன்னா மெஸ்

அப்புறம் இரவு வரை  டீ. வடை,  போளி, பட்டு, சுண்டல் ஆகியவை சமைத்து விற்கப்படும்.  பசித்தோருக்கு  உணவளிக்க  வாகனங்களில் மதியம் உணவு அளிப்பதற்காக மதிய உணவு தயாரிக்கப்படும். இந்த இன்பம் உணவகத்தில் பசியோடு வருபவர்களுக்கு வயதான முதியோர் மனநிலை திக்கப்பட்டோர், திருநங்கைகள் மாற்றுதிறனாளிகளுக்கு முற்றிலும்  இலவசமாக பசியாற்றப்படுகிறது.

காரியாபட்டி இன்பம் உணவகம்

பணம் கொடுத்து சாப்பிடுபவர்களுக்கு  வயிறாற சாப்பிட பத்து ரூபாய். எனவேதான் பசித்தோருக்கு உணவளிக்கும் இன்பம் உணவகம்  என பெயரிட்டுள்ளோம். தினமும்  அன்னபூரணி அருளால் மக்கள் வயிறாற பசி ஆறி செல்வது சிறப்பான நிகழ்வாக இருக்கிறது. 

இரவு  இட்லி தயார் செய்வோம். இரவு 10.00 மணிக்குள் கடை அடைத்துவிட்டு  போய் படுத்தால்  உடம்பு சொடக்கு எடுத்த மாதிரி இருக்கும்ங்க. 1000 வாடிக்கையாளரை  பார்த்த திருப்தி இருக்கே, .திருப்பதிபெருமாளே வந்த மாதிரி இருக்கும். பசியாற உணவு பொட்டலம் கொடுக்கும் மகிழ்ச்சி  இறைவனுக்கே  அர்ப்பணம்.  இதுதாங்க  நம்ம வேலை.  நம்ம செய்யுற  வேலைய  ரசித்து  ருசித்து  செய்தால்  கடவுள் நம்மை தேடி வருவார்.\

Must Read: கோவையில் ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தமிழ்நாடு சிறுதானிய மாநாடு

நானும் , எனது அக்காவும் படித்த படிப்பை விட்டு பிடித்த  தொழிலை  செய்கிறோம்.  ஒரு டீ கடையோ  உணவகமோ  நடத்துவது  சவாலாகவும்  இருக்கும். சந்தோஷமாகவும்  இருக்கும்.  நம் மனதை பொறுத்து பச்சதண்ணி பாட்டில் இருபது ரூபாய்..வயிறாற சாப்பாடு பத்து ரூபாய்.ன்னு மக்கள் பேசும்போது சந்தோஷமா இருக்கும்.

நம்மை நேசிப்போம். நம் தொழிலையும் நேசிப்போம்.  நாங்கள் நம்ம பசித்தோருக்கு உணவளிக்கும் இன்பம் உணவகத்திற்கு  கோடி நன்றிசெலுத்துகிறோம். தொடர்புக்கு; விஜய், பசித்தோருக்கு உணவளிக்கும் இன்பம் உணவகம் காரியாபட்டி  9443467379

#FoodForPoor #KariyapattiFreeFood  #KariyapattiInpamUnavakam


Comments


View More

Leave a Comments