கெட்டுப்போன பிஸ்கெட் பாக்கெட்கள் விற்ற தியேட்டர் கேன்டீன் மீது நடவடிக்கை…


சேலம் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள தியேட்டர் கேன்டீனில்  தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக ஆன்லைன் வாயிலாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார்கள் வந்தன. 

இதையடுத்து சம்பந்தபட்ட தியேட்டர் கேன்டீனில்  மாவட்ட உணவு பாதுகாப்பு குழுவினர் தியேட்டரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள், பூச்சி விழுந்த கெட்டுப்போன பால், குளிர்பானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தவிர லேபிள்கள் இல்லாத ரோஸ்மிக் பாட்டில்கள், 56 காபி பாட்டில்கள்,ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து கேண்டீன் மீது வழக்கு தொடரப்படும் என்றும் மேலும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறைஅதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், திரையரங்க உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது

Must Read: ரத்த சோகை; தீர்வுகாண 5 முக்கிய விஷயங்கள்…

இதே போல பாலக்கோடு அருகே கொலசன அள்ளி பகுதியில் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதி ஆன உணவு பொருள்கள் விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது.  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொலசனள்ளி, வெள்ளிசந்தை ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் , பெட்டி கடைகள் மற்றும் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

ஒரு கடையில் மட்டும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை ஆறு பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய  லேபிள்கள் அச்சிடாத தின்பண்டங்கள் மற்றும் உரிய தயாரிப்பு தேதி, முகவரி அச்சிடாத குளிர்பான பாட்டில்கள், குடிநீர் கேன்களை பறிமுதல் செய்தனர். விற்பனை செய்த கடைகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. 

-நமது நிருபர் 

#FssaiRaid  #FoodSaftyRaid #RaidAtTheatreCanteen


Comments


View More

Leave a Comments