நம்மாழ்வாரின் சிந்தனைகளை உள்வாங்கி தெளிவு பெறுவது அவசியம்


இயற்கை வழி வேளாண்மை குறித்தும் ஐயா நம்மாழ்வார் குறித்தும் அறிவதற்கு புதுக்கோட்டை மதர் தெரசா வேளாண் கல்லூரியில் இருந்து 101 மாணவர்கள் 4 ஆசிரியர்கள் கடந்த  26 ம் தேதி வானகம் வந்திருந்தனர் . அவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் நோக்கங்கள் மற்றும் பசுமை புரட்சி என்ற வேசம்போட்டு விவசாயத்தில் ரசாயன பயன்பாடும் விஷத் தெளிப்பும் எல்லா உயிர்களின் வாழ்விலும் ஏற்படுத்திய அபாயம் குறித்தும் விளக்கினோம்.

வந்திருந்த மாணவர்களில் fertilizer என்பது நிலத்தைத் வளப்படுத்துவது ஆனால் விஷத்தையும் ரசாயனத்தையும் fertilizer என தவறாக கற்கிறீர்கள் அதுமட்டுமின்றி மண்ணையும் சுற்றுச் சூழலையும் சீர்குலைக்கும் செயலை வேளாண்மை படிக்கும் மாணவர்கள் ஐயா நம்மாழ்வாரின் சிந்தனைகளை உள்வாங்கி தெளிவாக்கி கொள்வதே இன்று மிக அவசியமாகிறது  என நம் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். 

வானகத்தில் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா

வானகத்தின் தன்னார்வலர் நண்பர்கள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பண்ணை வலம் அழைத்துச் சென்று ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு வழி முறைகளை விளக்கி கூறினர் இவையெல்லாம் மாணவர்களுக்குள் ஏற்பட்டுத்திய நல் அதிர்வை உண்மையில் உணர்ந்தோம் .

Also Read: குழந்தைபேறின்மையால் இயற்கை உணவுக்கு மாறி வெற்றி கண்டவர்...

மாணவர்களுடனான அன்றைய சந்திப்பின் இறுதியாக நன்றி அறிவிப்பின் போது வானகம் வந்திருந்தது குறித்து மாணவி ஒருவர் இவ்வாறு அவர் கூறினார்.  "நாங்கள் நிறைய கற்கிறோம் ஆனால் இன்று ஐயா நம்மாழ்வாரின் வானகத்திடமிருந்து உண்மையை கத்துக்கிட்டத உண்மையாய் உணர்கிறோம் .... இவற்றை நாங்கள் உறுதியாக கடைபிடிப்போம் என நன்றி தெரிவித்தார். உண்மையை விதைப்பதும் உண்மையை விளைவிப்பதும் ஐயா நம்மாழ்வாரிடமிருந்த இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது 

- வெற்றிமாறன் இரா ( வானகம் - நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம் )

#AgriEvents #OrganicTraining #NaturalLife #Vanagam

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments