குழந்தைபேறின்மையால் இயற்கை உணவுக்கு மாறி வெற்றி கண்டவர்...


அனுபவம்... வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆசான் என்பார்கள். அந்தவகையில் கோவை, ஈரோடு, தர்மபுரி மாவட்டப் பகுதிகளில் இயற்கை விவசாயம் செய்பவர்களின் அனுபவங்களைக் கேட்டபோது மலைப்பாக இருந்தது. ஒவ்வொருவரும் அவர்களுக்குத்தெரிந்த நுட்பங்களை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுவருகின்றனர். பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஆளாளுக்கு அவர்கள்தம் பங்குங்கு சத்தமில்லாமல் சில பணிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அவற்றில் சில மட்டுமே வெளியுலக்குக்கு தெரியவருகிறது. மற்றவை அப்படியே அவர்களுக்குள்ளேயே நின்றுபோய்விடுகின்றன.

ஒரு வித்தியாசமான விவசாயியை சந்திக்க நேர்ந்தது. இயற்கையை நேசிக்கும் அவர், எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்று வெறுமனே சொல்லிவிட்டு கடந்துபோய்விட முடியவில்லை. தனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் அவரை இயற்கை விவசாயியாக மட்டுமல்லாமல் அவரது வாழ்வியலையும் மாற்ற வைத்திருக்கிறது.

Also Read: பட்டினியில்லா சென்னையை நோக்கமாக கொண்டு நோ ஃபுட் வேஸ்ட் இயக்கம்

குழந்தைப்பேறின்மைக்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனற்றுப்போன சூழலில் மனித வாழ்க்கை பற்றியும், இயற்கைச் சூழல் பற்றியும் அவரை தேட வைத்திருக்கிறது. முதலில் தன்னை மாற்றிக்கொண்டார். இயற்கை உணவுமுறைகளை உண்ணத் தொடங்கியிருக்கிறார். 

இயற்கை உணவுக்கு மாறி குழந்தை பேறில் வெற்றி கண்டவர்

அவர் மட்டுமல்ல அவரது துணைவியாருக்கும் அதுபற்றி புரியவைத்து வழிக்கு கொண்டுவந்தார். அதன்படி தேங்காய், தேங்காய்ப்பால் மற்றும் வாழைப்பழத்தை காலை உணவாக எடுத்துக்கொள்வது, மதியம் சமைத்த உணவு, இரவில் முடிந்தால் உணவு இல்லையென்றால் இல்லை. இதன் தொடர்ச்சியாக சின்ன வெங்காயத்தில் வெள்ளை வெங்காயத்தை தேனுடன் சேர்த்து உண்பது, செவ்வகத்திப்பூக்களை உண்பது என தன்னை மாற்றிக்கொண்டார். இப்போதைக்கு பெரும்பாலும் வெள்ளை வெங்காயம், செவ்வகத்திப்பூக்களே உணவாக இருக்கின்றன.

Also Read: பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள் இணைந்த ஃப்லேக்கிஸ்

-எம்.மரியபெல்சின் 

(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

#OrganicFoods #HealthyOrganic   #HealthyLifestyle #OrganicWayOfLife 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 


Comments


View More

Leave a Comments