கோவையில் அக்டோபர் 9ம் தேதி அடுப்பில்லா சமையல் செய்முறைப் பயிற்சி


கோவை சூலூரில் உள்ள  செஞ்சோலை அமைப்பின் சார்பில் எண்ணைய் இல்லாத, சூடுபடுத்தப்படுத்த தேவையில்லாத(NO OIL- NO BOIL COOKING WORKSHOP) சமையல் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. திண்டுக்கல்.மாவட்டம் சித்தையன்கோட்டை பகுதியை சேர்ந்த நா.நாகரத்தினம் அவர்கள் பயிற்சி அளிக்க உள்ளார். வரும் அக்டோபர் 09ம் தேதி ஞாயிறு காலை 09:30 மணி முதல் மதியம்  01:30 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது. 

Must Read: டெங்கு காய்ச்சல் பாதிப்பு;தவிர்க்க வேண்டிய, உண்ண வேண்டிய உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்…

இந்த பயிற்சியில் 7 வகை சாலட்,2 வகை வடை & சட்னி,லட்டு & பனியாரம்,இனிப்பு பர்பி,4 வகை இட்லி,6 வகை அவல் சாதம்,3 வகை அவல் பாயாசம்,அவல் இளநீர் ஆகியவை சமைப்பது குறித்தும் மேலும் பல சமையல் குறித்தும் விளக்கப்பட உள்ளது. பயிற்சிக்கு கட்டணம் ஏதும் இல்லை. அதே நேரத்தில் பயிற்சிக்கான ஏற்பாடு செலவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். 7904440266 என்ற மொபைல் எண்ணில் முன்பதிவு செய்யவும். 

மேலும் விவரங்களுக்கு செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பயிற்சிப் பண்ணை, கலங்கல் சாலை,சூலூர்,கோவை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.https://maps.app.goo.gl/9GeKqoa8iviNCCai8

#OrganicFarmingTraining , #OrganicFarming,  #FarmingTraining #LifeStyleTraining #CookingTraining


Comments


View More

Leave a Comments