சைதை மாரி ஹோட்டல் உரிமையாளர் கண்டுபிடித்த வடகறி


இட்லிக்கு சட்னி, சாம்பார் என்ற காம்பினேஷனுக்கு மாற்றாக வந்தது இட்லி வடகறி காம்பினேஷன். வடகறியை கண்டுபிடித்து அதன் ஆதிக்கத்தைத் தொடங்கி வைத்தது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாரி ஹோட்டல் என்ற உணவகமாகும். 

இட்லிக்கு மட்டுமின்றி தோசை, இடியாப்பம் போன்ற உணவுகளுக்குத் தொட்டுக்கொள்ள நல்ல காம்பினேஷனாக இருப்பது வடகறி. சென்னை சைதாப்பேட்டை மாரி ஹோட்டல் உரிமையாளர்  மாரிமுத்துதான் வடகறி எனும் டிஷ்-ஐ இந்த சுவை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்.

Must Read: சக்கையான உணவுகளை விட சத்து நிறைந்த உணவு உண்பது நல்லது..

சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெருவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாரி ஹோட்டலை மாரிமுத்து நடத்தி வருகிறார் வாடிக்கையாளர்கள் இவரது பெயரை சுருக்கி மாரி கட, மாரி கட என்று அழைத்து மாரி ஹோட்டல் என்ற பெயர் நிலை பெற்று விட்டது. 

இத்தனைக்கும் கடைக்கு பல ஆண்டுகளாக  போர்டு கூட இல்லாமல் இருந்தது. வடகறியின் புகழைத் தொடந்து, வெளியூர்களில் இருந்து சென்னை வருவோர் தெரிந்து கொள்வதற்காக போர்டு அண்மையில்தான் வைக்கப்பட்டது. 

சைதை வடகறி

மாரி ஹோட்டல் உணவின் தரமும், வடகறியின் சுவையும் சென்னை மக்களை இந்த ஹோட்டலை நோக்கி ஈர்த்து விட்டது. இப்போது வடகறி தமிழகம் தாண்டி ஆன்லைனில் உலகம் முழுவதும் புகழ்பெற்றுவிட்டது. 

கறிக்குழம்பு வைப்பது போலத்தான் வடகறியை இவர்கள் தயாரிக்கிறார்கள். பட்டைகிராம்பு தாளித்து இஞ்சி, பூண்டு பேஸ்ட் , வெங்காயம், தக்காளி போன்றவை சேர்த்து வதக்க வேண்டும். கிரேவியாக மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய் தூளை சேர்க்கின்றனர். இது கொதி வந்ததும் பக்கோடாவைப் போட்டு மீண்டும் ஒரு கொதிக்க வைத்து வடகறி தயாரிக்கின்றனர்.

வடகறியின் விற்பனைதான் நாளுக்கு நாள் அள்ளுகிறது. தினமும் 5 முறைகளுக்கு மேல் வடகறி தயாரிக்கின்றனர். அப்படியும் சீக்கிரமே தீர்ந்து போய் விடுகிறது. வந்து ஏமாந்தவர்கள் மறுநாள் சீக்கிரமே வந்து வடகறியை வாங்கிச் செல்கின்றனர்.

-ரமணி 

#SaidaiVadakari  #VadakariSidedish  #IdliWithVadakari


 

 

 

Comments


View More

Leave a Comments