இந்த மூலிகை பானங்கள் உங்கள் தலைவலிக்கு மருந்தாகும்..
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது வித்தியாசமான உணவுப் பழக்கம் ஆகியவைதான் அதற்கு காரணம். தலை வலிக்கிறது என்று சொல்லிக் கொள்வதே ஒரு பெருமை என்று சிலர் கருதுகின்றனர்.
தலைவலிக்காக நாம் மாத்திரைகளை மட்டும் நாடுகின்றோம். ஆனால் ஒரு எளிய ஒரு கோப்பை தேநீர் உங்கள் கடுமையான தலைவலியை குணப்படுத்தும். தலைவலியை அற்புதமாக குணப்படுத்தக்கூடிய சில பானங்களை இங்கே பார்க்கலாம்.
இலவங்கப்பட்டை, துளசி கலந்த தேநீர்
கொஞ்சம்போல் இலவங்கப்பட்டை சேர்ப்பது பல அதிசயங்களை செய்யும், இலவங்கப்பட்டை ஒரு இயற்கை வலி நிவாரணியாக செயல்படுவதால் தலைவலிக்கு பயனுள்ளதாக இருக்கும். இதேபோல் உங்கள் தேநீரில் துளசி சேர்ப்பது அழற்சி எதிர்ப்பு பண்புகளை நீக்கும். மன அழுத்தம், பதற்றம் காரணமாக இருக்கும் தசை வலியை தளர்த்தும்.
ஆப்பிள் சாறு, மஞ்சள் கலந்த தேநீர்
தேயிலையுடன் வடிகட்டப்படாத ஆப்பிள் சாறு சேர்ப்பது அதிகப்படியான சளியை அகற்ற உதவும், இதனால் சைனஸ் பாதிப்பு குறையும்.
Must Read: மளிகை பொருட்கள் வாங்கும் கலையில் நீங்கள் எப்படிப்பட்டவர்?
கிராம்பு மற்றும் இஞ்சி தேநீர்
கிராம்பு இயற்கையாக நரம்பு செல்களின் வீக்கத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் தலைவலி மற்றும் மன அழுத்தம் குணமாக்கும். மறுபுறம் இஞ்சி குமட்டலை கட்டுப்படுத்துகிறது மற்றும் தலைவலிக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.
செம்பருத்தி தேநீர்
செம்பருத்தி இயற்கையிலேயே ஆக்சிஜனேற்றங்கள் நிறையக் கொண்டதாகும். இது தலைவலியைக் குணப்படுத்த உதவுகிறது. செம்பருத்தி தேநீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
-பா.கனீஸ்வரி
#HeadAcheCure #DrinksForHeadAche #HealthyDrinks #OrganicDrinks #FoodNewsTamil
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments