மென்மையான நீர் தோசை செய்ய எளிமையான டிப்ஸ்
தேவையான பொருட்கள்; கப் அளவு விகிதம் அரிசி எடுக்கும் கப் அளவிற்கு 1 கப் அரிசிக்கு 1/4 கப் தேங்காய் துருவல் + அரைத்த தோசை மாவைக் கரைக்க : 1 கப் அரிசி அளவில் 2 கப் நீர். தேங்காயிலுள்ள பிரவுன் நிறத்தை சீவி எடுத்துவிட்டு துருவி போடவும்
செய்முறை : 1 கப் பச்சரிசியை (250 கிராம்) 6 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறிய பின்பு அதை வடித்து எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு 2 துண்டு தேங்காயை துருவிப் போட்டு நன்கு மென்மையாக அரைத்து எடுக்கவும்.இதை ஒரு பெரிய பவுலில் மாற்றி தேவையான உப்பு போட்டு 2 கப் நீர் ஊற்றி பால் போல தளர்வாக கரைக்கவும்.
தவா/ தோசைக்கல்லை சூடாக்கி சிறிது ஆயிலால் துடைத்து, ஒரு டம்ளரில் மாவை எடுத்து ரவா தோசை போல (அ)கரண்டியால் கல்லில் மாவை ஊற்றி கல்லை ஆப்பத்திற்கு சுற்றுவது போல சூற்றி தோசை வார்த்து வேகவிடவும் (ஒரு மூடியால் மூடியும் வேகவிடலாம்) வெந்ததும் தோசையின் விளிம்புகள் தானாக மேலெழுந்து வரும்.
அதை நம் கையால் அப்படியே எடுக்கலாம், அல்லது கரண்டியால் தோசையைத் திருப்பாமல் அப்படியே மடிக்கலாம்! இளநீருக்குள் உள்ள தேங்காய் போல மென்மையான உடுப்பி ஸ்டைல் நீர் தோசை ரெடி! புதினா/ மல்லி/ இஞ்சி/ தக்காளி/ வெங்காயம் போன்ற புளிப்பு சட்னிகளின் பெஸ்ட் தோஸ்த் இது! சாம்பார் வகைகளை விட.. வெஜிடபிள் குருமா ஆலு சப்ஜி போன்ற குருமா வகைகள் இதற்கு நல்ல காம்போவாகும்.
Must Read: சைவமோ, அசைவமோ சுவையை கட்டமைப்பதே முக்கியம்…
குறிப்பு : 2 மணிநேரம் அரிசியை ஊற வைத்தும் செய்யலாம் ஆனால் அது பாரம்பரிய முறை அல்ல. தவாவில் ஆயில் தடவினால் போதும், ஆயில் ஊற்ற வேண்டியதில்லை. ஒவ்வொரு தோசை வார்க்கும் போதும் மாவை கரைத்து விட்டு பின்பே தோசை வார்ப்பது சிறந்த முறையாகும்.
தோசைக்கல்லில் ஆயில் தடவும் போது ஒரு வெங்காயம் அல்லது கத்திரிக்காயால் தடவவும், மாவில் தேங்காய் அளவு கூடினால் தோசை நன்கு கல்லில் ஒட்டிக் கொள்ளும். இந்த தோசையை கல்லில் இருந்து எடுத்ததும் சூடாக சாப்பிட வேண்டும், ஆறினால் ருசி நன்றாக இருக்காது! பச்சரிசி தான் இந்த தோசைக்கு பெஸ்ட் அரிசி.
கட்டுரை நன்றி; வெங்கீஸ் கிச்சன் வெங்கடேஷ் ஆறுமுகம்
#Neerdosai #HowtoprepareNeerDosai #Howtocookneerdosai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments