வயிற்று வலியை குணப்படுத்தும் உணவுகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்….
தவறான உணவுப் பழக்கத்தால் வயிற்று வலி
வயிற்று வலியை குணப்படுத்தும் தயிர் சாதம்
வயிற்று வலிக்கு ஏற்ற உணவுகள்
வயிற்றுவலி என்பது மிகவும் வேதனையான சூழலாகும். நமது தவறான உணவுப் பழக்கங்கள் காரணமாகவும், வாழ்க்கை சூழல்காரணமாகவும் வயிற்று வலி ஏற்படக் கூடும். மன உளைச்சல், வேதனை ஆகியவற்றின் போதும் வயிற்றில் வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
வயிற்று வலி வந்தவர்கள் எதையும் சாப்பிட விரும்ப மாட்டார்கள். சாப்பிட்டால் வயிற்று வலி அதிகரிக்குமோ என்றும் பயப்படுவார்கள். சாப்பிடாமல் வெற்று வயிறோடு இருப்பது நிலமையை இன்னும் மோசமாக்கி விடும்.
நாம் சாப்பிடாவிட்டாலும் கூட உங்கள் உடலில் இருந்து அத்தியாவசிய உப்புகள் சிறுநீராக விரைவாக வெளியேறிவிடும். எனவே அதனை சரி செய்ய குறிப்பிட்ட இடைவெளியில் உரிய உணவுகளோ அல்லது நீர் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ள வேண்டும். உங்கள் உடலில் நீரிழப்பு நேரிட்டால், உப்பு-சர்க்கரை-நீர் கலவையை நீங்கள் குடிக்க வேண்டும். இது தவிர, உங்கள் வயிற்று வலியின் வேதனையில் இருந்து விடுபட சில லேசான உணவு பொருட்கள் இங்கே பார்க்கலாம்.
தயிர் சாதம்
வயிற்று வலியில் இருந்து உடனடி விடுதலை கிடைக்க வேண்டும் என்றால் தயிர் சாதம்தான் தான் முதன்மையான பரிந்துரையாகும். ஜீரணிக்க மிகவும் எளிதானது மற்றும் அரிசியில் உள்ள நார் சத்து உள்ளடக்கம் கொண்டது. எனவே வயிற்றுப்போக்கில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க முடியும்.
Must Read: வாதுமை கொட்டை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
அரிசியை வேகவைத்து சமைத்த பின்னர், அதில் தயிரில் கலக்க வேண்டும். அதனுடன் சிறிது பாறை உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். சீரகத்தூள் சேர்க்கவும். பின்னர் நன்றாக கலந்து சாப்பிடவும். தயிர் சாதம் சுவையானது மட்டுமல்ல வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற உணவாகும். தயிரில் புரோபயாடிக்குகளின் வளமான ஆதாரம் உள்ளது. குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் சமநிலையை மீட்டெடுக்கவும் தயிர் உதவும். .
இஞ்சி தேநீர்
வயிற்று கோளாறு வயிற்று வலி, குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும். இஞ்சி தேநீர் குடிப்பது உங்கள் முழு உடலுக்கும் நிவாரணம் கிடைக்கும். சிறிது துருவிய இஞ்சியுடன் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். உங்கள் சுவைக்கு ஏற்ப எலுமிச்சை அல்லது தேன் சேர்த்து தேநீரை வடிகட்டவும். இஞ்சி தேநீர் குடிப்பதன் காரணமாக உடனடியாக குமட்டலைத் தடுக்க முடியும். குடல், வயிற்று எரிச்சலை குணமாக்கும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
வாழைப்பழம்
வாழைப்பழங்கள் இயற்கையான ஆன்டிசிட் விளைவுகளைக் கொண்டுள்ளன மற்றும் வயிற்றுப்போக்கை சரி செய்யும், வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் இது வயிற்றில் தோன்றும் எரிச்சலைக் குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. வாழைப்பழம் உடனடி ஆற்றலை அளிக்கிறது,
Must Read: பிரண்டை எனும் அற்புத வைரம் | பிரண்டை மருத்துவ பயன்கள்
ஓட்ஸ்
ஓட்ஸ் வெறும் வயிற்றில் சாப்பிட சுவையான லேசான உணவு. நீங்கள் உப்பு ஓட்ஸ் அல்லது இனிப்பு ஓட்ஸ் செய்யலாம். உப்பு ஓட்களில் நீங்கள் எந்த மசாலாவையும் சேர்க்கக்கூடாது. ஏனெனில் இது ஏற்கனவே வயிற்று வலியில் இருக்கும்போது மசாலா சேர்த்தால் வயிறு இன்னும் கூடுதலாக எரிச்சல் அடையும். பால் சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பு ஓட்ஸும் நல்லது. ஓட்ஸில் தண்ணீர் கலந்தும் சமைக்கலாம். ஓட்ஸுடன் கொட்டைகள் அல்லது பழங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். விரும்பினால், அரை வாழைப்பழத்தை மட்டுமே சேர்த்து சாப்பிடலாம். ஓட்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, வயிற்றுப்போக்கை மட்டுப்படுத்த முடியும்.
-ஆகேறன்
#StomachPain #FoodsForStomachPain #PattiVaithiyam #AviodStomachPain #CurdRiceForStomachPain
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments