வாதுமை கொட்டை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
அளவற்ற சத்துகள் கொண்ட வாதுமை
வாதுமை கெட்ட கொழுப்பை கரைக்கும்
மூளை செயல் திறனுக்கு உகந்தது
செரிமானத்துக்கு உதவக்கூடியது
அக்ரூட், வால்நட் என்றெல்லாம் அழைக்கப்படும் வாதுமை கொட்டை பல்வேறு உடல் ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது. வாதுமை மரம் உலகின் பல நாடுகளில் வளர்க்கப்படுகிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அமெரிக்கா, ஸ்பெயின், ஈரான், மொராக்கோ , சிரியா, துருக்கி, இத்தாலி, ஆஸ்திரேலியா, அல்ஜீரியா, துனியா ஆகியவை வாதுமை கொட்டையை அதிகம் விளைவிக்கும் முதல் பத்து நாடுகள் வரிசையில் இடம்பெற்றுள்ளன. உலகநாடுகளுடன் ஒப்பிடுகையில் வாதுமை மரம் வளர்ப்பது இந்தியாவில் குறைவு. இந்தியாவுக்கு தேவையான வாதுமை கொட்டை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் வாதுமை
நம் நாட்டில்,வாதுமை மரம் முக்கியமாக குளிர் பிரதேசங்களின் மலைப் பகுதிகளில் வளர்கிறது, முக்கியமாக ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவு வாதுமை மரம் வளர்க்கப்படுகிறது. உத்தரகாண்ட், கேரளா மற்றும் ஆந்திரா, தமிழ்நாட்டின் சில மலைப் பகுதிகளிலும் வாதுமை மரம் வளர்க்கப்படுகிறது.
வாதுமையில் உள்ள சத்துகள்
வாதுமையில் மோனோ, பால்அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் உயர்ந்த உள்ளடக்கம் உள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட ஏழு வகை கொட்டை வகைகளை விடவும் வாதுமையில்தான் அதிக ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Must Read: பிரண்டை எனும் அற்புத வைரம் | பிரண்டை மருத்துவ பயன்கள்
வாதுமையில் நார்சத்து அதிக அளவு உள்ளது. செலினியம் , வைட்டமின் பி7 ஆகிய சத்துகள் முடி உதிர்வை குறைக்கின்றன. வாதுமையில் உள்ள தாது சத்துகள் டைப் 2 நீரழிவு நோயைத் தடுக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகின்றன.
வாதுமை எப்படி சாப்பிட வேண்டும்?
7 முதல் 10 வாதுமை கொட்டைகளை முந்திய தினமே ஊற வைத்து அடுத்த நாள் காலையில் அதனை சாப்பிட வேண்டும். உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருந்தால் தொடர்ச்சியாக ஆறுமாதங்கள் தினமும் 25 கிராம் முதல் 80 கிராம் வரை வாதுமை கொட்டை சாப்பிடுவது சிறந்ததது. வாதுமையை ஊற வைக்காமலும் சாப்பிடலாம்.
இதய ஆரோக்கியத்துக்கு சிறந்தது
வாதுமை பருப்பில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமானது இதய நோயாளிகளின் நோய் அபாயத்தின் தன்மையை குறைக்கின்றன. வாதுமையை தினமும் சாப்பிடுவதன் வாயிலாக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எளிதாக கரைத்து இதயநோய்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கொழுப்பு குறைவதன் வாயிலாக மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் பாதிப்புகளில் இருந்து நாம் குணம் பெற முடியும்.
மூளை வளர்ச்சிக்கு உதவும்
இதயத்துக்கு மட்டுமின்றி குடல் ஆரோக்கியத்துக்கும் வாதுமை நல்லது. குடலில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் வளர்வதை உறுதி செய்யும் வாதுமையானது. குடலின் செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. வாதுமையில் உள்ள டிஎச்ஏ எனும் ஒமேகா 3-வகை அமிலமானது மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மூளையின் அறிவாற்றலை மேம்படுத்த இது உதவுகிறது. வயது முதிந்தவர்களுக்கு நினைவு திறன் குறையும் போது வாதுமை சாப்பிடும்படி பரிந்துரைப்பதற்கான காரணம் இதுதான்.
ஆண்மை குறைபாட்டைப் போக்கும்
வாதுமை கொட்டையை சாப்பிடுவதன் வாயிலாக ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுவது குறைகிறது. வித்தனுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் படி ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு தினமும் 75 கிராம் வீதம் வாதுமை கொட்டைகள் உண்ணுவதற்காக தரப்பட்டது. ஒருமாத த்துக்குப் பின்னர் அவர்களை பரிசோதனை செய்ததில் ஆண்மை குறைபாட்டின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
வாதுமை எண்ணைய்
வாதுமை கொட்டையில் இருந்து எண்ணைய் தயாரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. வாதுமை எண்ணைய் பயன்படுத்துவதன் மூலம் முடி ஆரோக்கியமாக, பளபளப்பாக வளர்வதை உறுதி செய்யலாம்.
Must Read: இது தெரிந்தால் நீங்கள் இன்ஸ்டண்ட் நூடுல்ஸை சாப்பிட மாட்டீர்கள்
வாதுமை எண்ணைய் தேய்ப்பதன் மூலம் சருமத்தில் சுருக்கங்கள் நீங்கி, இளைமையான தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். முகத்தில் தடவியும் மசாஜ் செய்யலாம்.
வாதுமை எங்கு கிடைக்கும்?
வாதுமையை ஆன்லைனிலேயே வாங்க முடியும். பிக்பாஸ்கெட் முதல் அமேசான் வரை அனைத்து தளங்களிலும் ஆன்லைனில் வாதுமை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்களிலும் வாதுமை கிடைக்கிறது. நமது தெருவில் உள்ள பலசரக்குக் கடைகளிலும் வாதுமை கிடைக்கிறது. ஆன்லைனை விட குறைந்த விலையிலேயே உள்ளூர் கடைகளில் வாதுமை கிடைக்கும்.
-ஆகேறன்
#AlmondBenefits #HealthyAlmond #DailyIntakeOFAlmond #HowToBuyAlmond #Vathumai kottai #Walnuts
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments