
வானகம் நடத்திய 3 நாள் இயற்கை வேளாண் பயிற்சி இனிதே முடிவுற்றது…
கரூர் மாவட்டம் கடவூரில் உள்ள வானகம் அமைப்பு கடந்த 16 , 17 , 18 ஆகிய மூன்று நாட்களில் இயற்கை விவசாய பயிற்சியை வழங்கியது. ஐயா நம்மாழ்வாரின் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர் மரம் தங்கசாமி ஐயா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் நினைவாக மருத மரக்கன்று நடப்பட்டு பயிற்சி நிகழ்வுகள் துவங்கப்பட்டது .
Must Read: காய்ச்சலில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
இப் பயிற்சியில் ஒருங்கிணைந்த இயற்கை விவசாய தற்சார்பு பண்ணையை உருவாக்கும் நோக்கங்களையும் நுட்பங்களையும் உள்ளடக்கி ஐயா நம்மாழ்வார் உருவாக்கிய பயிற்சி அடிப்படையில் பயிற்சி நடைபெற்றது. .
நடைபெற்று முடிந்த இந்த பயிற்சியில் இயற்கை வழி வேளாண்மை, மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல், மழை நீர் அறுவடை, உயிர்வேலி, ஒருங்கிணைந்த பண்ணை, இடுபொருள் செய்முறை பயிற்சி, களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம், கால் நடை பராமரிப்பு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு, மரபு விளையாட்டு ஆகியவையும் நடைபெற்றன வானகம் பயிற்சி ஒருங்கிணைப்பு குழுவினர் வழங்கினர்.இப் பயிற்சியில் பங்கேற்று பலனடைந்தவர்களுக்கு வானகம் சார்பாக பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டு பயிற்சி சிறப்புடன் நிறைவானது .இது போன்று வானகத்தின் பயிற்சி மற்றும் நிகழ்வுகள் சார்ந்து அரிய கீழிருக்கும் இணையதள தொடர்பு அல்லது செயலியின் இணைப்பை காணுங்கள்.
https://vanagam.org
https://vanagam.page.link/app
#AgriEvent #OrganicAgriculture #NatureLifeStyle #OrganicFoods #SiddhaMedcine
Comments