மாட்டுக்கறி உண்பதற்கு பிறரின் ஒப்புதல் தேவையா?
தண்ணீர் குடிப்பது எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு ஒருவர் மாட்டுக்கறி உண்பது. தண்ணீர் குடிப்பதற்கு பெரும்பான்மையினரின் அங்கீகாரத்தை பெறுவது எவ்வளவு அபத்தம் அவ்வளவு அபத்தம் மாட்டுக்கறி உண்பதற்கு பிறரின் ஒப்புதல் அங்கீகாரம். இட்லரை கோட்சேவை காரணம் காட்டி மாட்டுக்கறி உண்பதை நியாயப்படுத்துகின்ற அளவுக்கு நாம் தர்க்கத்தில் பலவீனமானவர்கள் அல்ல அலுவலர்கள் எடுக்கும் Arbitrary decision and biased decision அரசுக்கு மிகப்பெரிய சங்கடத்தை உருவாக்கும்.

சாப்பாட்டில் சமத்துவபுரம் என்பது மாட்டுக்கறி பிரியாணியினை அனுமதிப்பது. ஆயிரம் ஆண்டுகால நம்பிக்கைகளை அதுவும் தவறான திணிக்கப்பட்ட நம்பிக்கைகளை அறிவுகொண்டு தகர்த்து அந்த இடத்தில் சரியினை உறுதிப்படுத்துவது இடைவிடாத போராட்டம் அதற்கு அரசு நிச்சயமாக உறுதியாக நிற்கவேண்டும் இந்த அரசு அப்படி பல விஷயங்களில் நிற்கிறது. IAS கலெக்டராக இருந்தாலும் IPS ஆளுநராக இருந்தாலும் இந்திய அரசியல் சாசனத்தின் சாறு உணர்ந்து செயல்பட்டால் மக்களாட்சி இன்னும் மேன்மையுறும்.
Must Read: இயற்கையோடு இணைந்த தற்சார்பு வாழ்வியலின் அனுபவம்…
பிரியாணி திருவிழாவை ஒத்தி வைத்து தப்பித்துக்கொண்டார்கள் என்று சிறுமைப்படுத்தும்தோழர்களுக்கு திமுக அரசு முதன்முறையாக அமைத்த SC ST Commission அனுப்பியிருக்கின்ற சம்மனை பாருங்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் தன் செய்திக்குறிப்பில் மாட்டுக்கறி தவிர்த்து பிற பிரியாணிகள் விற்கப்படும் என்பது தீண்டாமையினை குறிப்பதாக இருக்கின்றது இதையே மனுவாக எடுத்துக்கொண்டு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு விளக்கம் தரவேண்டும் என்று கேட்டிருக்கின்றது. உண்மையிலேயே இந்தக்கேள்விகளும் கேட்கப்பட்ட விதமும் இந்த அரசு சமத்துவத்தை வேண்டும் அரசு அதற்காக இந்த இதயசுத்தியோடு உழைக்கின்றது என்பதை புரிந்துகொள்ளலாம்.

Transparent and sensible govt என்பதற்கு இது ஒரு சான்று. இதுபோன்ற நடவடிக்கைகளை வரவேற்பது பாராட்டுவது எல்லாம் ஓர் அரசை இதுபோன்ற பாதையில் நடைபோடுவதற்கு ஊக்குவிக்கும். பீப் சம்பந்தமான அதற்கு ஆதரவான இப்படி ஒரு சம்மனை இந்தியச்சூழலில் வேறு ஏதாவது ஓர் அரசு அனுப்பமுடியும் என்று நம்மால் நிச்சயமாக நம்பமுடியாது.
Branding பன்னுவது Hasty negative comments அடிப்பது மிக எளியச்செயல். அதையும் தாண்டி பார்ப்பது மிக முக்கியம் அவசியம் திராவிட மடல் என்பது என்ன என்று உண்மையிலேயே அக்கறையோடு கேட்பவர்களும் இருக்கின்றார்கள் பலபேர் எரிச்சலோடு கேட்பவர்களும் இருக்கின்றார்கள். அம்பாளையே கேள்விக்கேட்ட திராவிடம் ஆட்சியரையா கேள்வி கேட்காமல் விடும்?
நன்றி; Ramamurthi GK முகநூல் பதிவு
#AmburBriyaniFestival #BeefBiryani #BanOnBeef #BanOnPork #Tirupattur
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Comments
View More