
தி.நகர் சப்தகிரி டிபன் சென்டர்; இட்லிக்கு வடகறி இலவசம்
சென்னையில் ஒரு நேரத்துக்கு ரூ.1000 செலவிலும் டிபன் சாப்பிடலாம். ஒரு நேரத்துக்கு ரூ.100 க்கு குறைவாகவும் திருப்தியாக டிபன் சாப்பிடலாம் ரூ.100க்கு குறைவாக தரமான, விலை மலிவான, வயிறு நிறைவான உணவகம் தியாகராய நகர் தலைமை தபால் நிலையம் எதிரே சப்தகிரி டிபன் சென்டர் என்ற பெயரில் செயல்படுகிறது.
நகரில் உள்ள தரமான உணவகங்களில் ஒன்று என்று சொல்லும் அளவுக்கு இங்கு விற்பனை செய்யப்படும் உணவுகள் எல்லாமே தரமானவைதான். தரமானவை மட்டுமல்ல. விலை குறைவும் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. பொங்கல், வடை ஆகியவை மற்ற உணவகங்களை விட அளவில் அதிகமாகவும் கிடைக்கிறது.
Must Read: பீரியட்ஸின் போது வயிற்று வலி வந்தால் இந்த எளிய வைத்தியத்தை கடைபிடித்தால் போதும்…
காலையில் இட்லி, தோசை டிபன் சாப்பிட்டால் வடகறி இலவசமாக வழங்குகின்றனர். மற்ற உணவகங்களில் வடகறி எக்ஸ்ட்ரா சார்ஜ் ஆக வசூலிக்கப்படுகிறது. சில ஹோட்டல்களில் சர்வர்கள் ஒரே ஒரு கப் வடகறி மட்டும் தருவார்கள். ஆனால், இங்கு இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் போலவே வடகறியும் தொட்டுக்கொள்ள தருகின்றனர்.
இதுதவிர காலையில் இட்லிக்கு தக்காளி தொக்கு போன்ற சட்னியும் தருகின்றனர். அதன் சுவையும் அருமை. வயிறார சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் காப்பி சாப்பிடலாம் என்று தோன்றினால், காப்பியும் இங்கு விலை மலிவுதான். இவ்வளவு மலிவாக தரமான காப்பி தருவதும் சிறப்பாக இருக்கிறது.
விடுமுறை நாட்களில் உட்காருவதற்கு இடமின்றி கூட்டம் அள்ளுகிறது. மற்ற நாட்களிலும் இந்த கடையை தேடி வந்து உண்பவர்களே அதிகம். தரமான, விலை குறைவான நிறைவான உணவகம் என்ற வகையில் இதனை பரிந்துரைக்கின்றோம்.
-ருசி பிரியன்
#RestaurantReviews, #TnagarSabtagiriTiffenCenter, #GoodFoodAtTnagar
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
Comments